MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இனி வெறும் 3 நாளில் PF பணம் கையில் கிடைக்கும்! EPFO புது ரூல்ஸ் தெரியுமா?

இனி வெறும் 3 நாளில் PF பணம் கையில் கிடைக்கும்! EPFO புது ரூல்ஸ் தெரியுமா?

EPFO New Rules: இனிமேல் பிஎஃப் பணம் எடுப்பது எளிதாகும். இதற்காக EPFO புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம். 

2 Min read
Rayar r
Published : Mar 31 2025, 01:12 AM IST| Updated : Mar 31 2025, 08:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

EPFO என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு. இது ஊழியர்களுக்கு ஓய்வூதியம், உதவி வழங்குகிறது. இனி PF பணம் எடுப்பது எளிதாகும். EPFO இதற்கான புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.  விண்ணப்பித்த 3 நாட்களில் பணம் உங்கள் கையில் கிடைக்கும். இதுவரை க்ளைம் செய்தவுடன் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இனிமேல் அதற்கு அவசியமில்லை. மிக விரைவாக உங்களுக்கு க்ளைம் செய்யப்படும்.

24
EPFO New Rules

EPFO New Rules

ரூ.1 லட்சம் வரை க்ளைம்கள்

தற்போது 60% வரை க்ளைம்கள் தானியங்கி முறையில் நடைபெறுகின்றன. இந்த மாற்றங்களுக்குப் பிறகு ரூ.1 லட்சம் வரை க்ளைம்கள் 3 நாட்களில் நடக்கும். உடல்நலம், மருத்துவ செலவுகள், வீடு, படிப்பு, திருமணம் போன்ற க்ளைம்கள் விரைவில் கிளியர் செய்யப்படும்.

பெயர், பாஸ்புக் விவரங்கள் மாற்றம் எளிது

ஆதாருடன் இணைந்த UAN உள்ளவர்கள், EPFO அலுவலகம் செல்லாமல் ஆன்லைனில் பெயரை மாற்றலாம். தற்போது 96% மாற்றங்கள் EPFO அலுவலகம் இல்லாமல் நடக்கிறது.

இல்லத்தரசிகளுக்கு இனி கவலையில்லை! கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சூப்பர் முடிவு!

 

34
PF Money

PF Money

PF பரிமாற்றம் எளிது

ஆதாருடன் இணைந்த UAN இருந்தால், புதிய கம்பெனிக்கு ஜாயின் ஆகும் போது PF-ஐ மாற்றுவது எளிது. 90% பரிமாற்றங்கள் அனுமதி இல்லாமல் நடக்கும்.

செக்-லீஃப் தர தேவையில்லை

க்ளைம் செய்யும் போது, கணக்கு உறுதி செய்ய செக் லீஃப் அல்லது பாஸ்புக் தர வேண்டும். KYC அப்டேட் செய்தவர்கள் இவை ஏதும் இல்லாமல் க்ளைம் செய்யலாம்.

44
EPFO Rules Changes

EPFO Rules Changes

தகுதியற்ற க்ளைம்கள்

EPFO உறுப்பினர்கள் க்ளைம் செய்யும் முன் தகுதி உள்ளதா? என முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். இதனால் ரிஜெக்ட் ஆகும் க்ளைம்கள் எண்ணிக்கை குறையும்.

99% க்ளைம்கள் ஆன்லைனில்

இதுவரை 2024-25 நிதி ஆண்டில் 7.14 கோடி க்ளைம்கள் ஆன்லைனில் வந்துள்ளன. இனி ஃபீல்ட் ஆபீஸ் போக தேவையில்லை.

சீனியர் சிட்டிசன்களுக்கு வங்கியில் வீட்டுக்கடன் கிடைக்குமா?

UPI மூலம் EPF செலுத்துதல்

UPI மூலம் EPF க்ளைம் பேமெண்ட்ஸ் வழங்க NPCI உடன் பேசுகிறார்கள். முடிந்தால் டிஜிட்டல் வாலெட்கள் மூலம் பணம் எடுக்கலாம்.

EPFO வின் இந்த புதிய விதிகள் ஏப்ரல் 1 (நாளை) முதல் அமலுக்கு வர உள்ளன. இது குறித்து முழு விவரங்களை EPFO வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 
 

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு)
பி.எஃப். கடன் விண்ணப்பிப்பது எப்படி
வருங்கால வைப்பு நிதி கடன்
இந்தியா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved