ரூ.1000 அபராதம்.. பான் - ஆதாரை உடனே இணையுங்க.. 5 நிமிடத்தில் செய்யலாம்
பான் மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால், தவறினால் ரூ.1,000 அபராதம் மற்றும் பான் கார்டு செயலிழப்பு ஏற்படும் என அரசு எச்சரித்துள்ளது. இதனை நீங்கள் சில நிமிடங்களில் எளிதாக முடிக்கலாம்.

பான் ஆதார் இணைப்பு
பான் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இது மிக முக்கியமான தகவல். பான் மற்றும் ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி நெருங்கி வருவதாக மத்திய அரசு தொடர்ந்து எச்சரித்து வருகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இந்த இணைப்பு இதுவரை செய்யப்படவில்லை என்றால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும். அதோடு, உங்கள் பான் கார்டு செயலற்றதாகவும் மாற்றப்படலாம். இது உங்கள் நிதி தினசரி செயல்பாடுகளை பெரிதும் பாதிக்கும்.
வருமானவரி துறை
பான் கார்டு என்பது வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்வது, வங்கி கணக்கு திறப்பது, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, ஷேர் மார்க்கெட் பரிவர்த்தனை உள்ளிட்ட பல முக்கிய பணிகளுக்கு அவசியமான ஆவணம். பான் செயலற்றதாகிவிட்டால் இந்த சேவைகள் அனைத்தும் தடைபடும். அதனால் தான் பான்–ஆதார் இணைப்பு வருமானவரி துறை கட்டாயமாக்கியுள்ளது.
பான் அபராதம்
நல்ல செய்தி என்னவென்றால், பான்–ஆதார் இணைப்பை வீட்டிலிருந்தபடியே, உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் சில நிமிடங்களில் செய்து முடிக்கலாம். எந்த முகவர் உதவியும் தேவையில்லை. இந்த செயல்முறை மிகவும் எளிமையானது. இணைப்பு செய்ய, வருமானவரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
பான் செயலிழப்பு
அங்கு ‘Link ஆதார்’ என்ற விருப்பத்தை தேர்வு செய்து பான் எண், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பெயர் மற்றும் பிறந்த தேதி பொருந்தினால் OTP வரும். அதை உள்ளிடுவதன் மூலம் இணைப்பு உறுதி செய்யப்படும். அபராதம் காட்டப்பட்டால், ஆன்லைனில் ரூ.1,000 செலுத்திய பின் இணைப்பு நிறைவடையும். முழு செயல்முறை 2-5 நிமிடங்களில் முடியும்.
பான் ஆதார் கடைசி தேதி
மேலும், பான்-ஆதார் இணைப்பு நிலையை சரிபார்க்கவும் வசதி உள்ளது. அதற்காக ‘Link ஆதார் Status’ பகுதியில் பான் மற்றும் ஆதார் எண்ணை பதிவிட்டால், உங்கள் இணைப்பு நிலை உடனே திரையில் காட்டப்படும். இந்த இணைக்கப்படவில்லை என்றால், இன்று தானே செய்து அபராதம் மற்றும் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

