MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் அப்டேட்.. NPS-க்கு புதிய உத்தரவாத திட்டம் ரெடி?

ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் அப்டேட்.. NPS-க்கு புதிய உத்தரவாத திட்டம் ரெடி?

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு நிலையான வருமானத்தை உறுதி செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Jan 15 2026, 11:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
ஓய்வூதிய பாதுகாப்பு
Image Credit : our own

ஓய்வூதிய பாதுகாப்பு

ஓய்வூதியதாரர்களின் ஓய்வுக்குப் பிந்தைய வருமானத்தை உறுதி செய்யும் நோக்கில், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) புதியது நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வருங்காலத்தில் நிலையான வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, உயர் மட்ட நிபுணர் குழு ஒன்றை PFRDA அமைத்துள்ளது.

இந்தக் குழுவின் முக்கிய பணி, NPSக்குள் சட்டப்பூர்வமாக செயல்படுத்தக்கூடிய “உத்தரவாத ஓய்வூதிய அமைப்பை உருவாக்குவதற்கான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை தயாரிப்பதாகும். சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு உறுதியான தொகை கிடைக்கும்படி நடைமுறை உருவாக வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதன் மூலம் NPS திட்டம் மேலும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முயற்சி அரசின் “வளர்ந்த பாரதம் 2047” என்ற பெரிய இலக்குடன் இணைந்து செல்கிறது என்றும் கூறப்படுகிறது. அதாவது ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருளாதார பாதுகாப்பு, வயதான காலத்தில் கண்ணியமான வாழ்க்கையும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

22
ஓய்வூதிய செலுத்தும் கட்டமைப்பு
Image Credit : our own

ஓய்வூதிய செலுத்தும் கட்டமைப்பு

மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழுவுக்கு, இந்திய திவால் மற்றும் நொடித்துப் போன வாரியத்தின் (IBBI) முன்னாள் தலைவர் டாக்டர் எம்.எஸ். சாஹு தலைமை வகிக்கிறார். இதில் சட்டம், நிதி, காப்பீடு, ஆக்சுவேரியல், மூலதனச் சந்தை மற்றும் கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். தேவையான வெளி நிபுணர்களை ஆலோசனைகளுக்காக இணைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2025 செப்டம்பர் 30 அன்று வெளியிடப்பட்டது PFRDA ஆலோசனைக் கடிதத்தில் உள்ள பரிந்துரைகளை முன்னெடுத்துச் செல்லவும், உத்தரவாத ஓய்வூதியம் கட்டணங்களுக்கு ஒழுங்குமுறை கட்டமைப்பு உருவாக்கவும் இந்த குழு செயல்படும். சேமிப்பு கட்டத்திலிருந்து ஓய்வூதியம் பெறும் கட்டத்திற்கு செல்லும் போது சந்தாதாரர்களுக்கு செயல்முறை எளிமையாகவும், வெளிப்படையாகவும், தடையின்றியும் இருக்க வேண்டும் என்பதையும் கவனிக்கிறது.

மேலும் லாக்-இன் காலம், திரும்பப் பெறும் வரம்புகள், விலை நிர்ணயம், சேவை கட்டணங்கள் போன்ற செயல்பாட்டு அம்சங்கள் தெளிவுபடுத்தப்படும். இடர் மேலாண்மை, மூலதனத் தேவைகள், வரி விளைவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். தவறான விற்பனையைத் தடுக்கவும், உறுதி ஓய்வூதியம் மற்றும் "சந்தை அடிப்படையிலான உத்தரவாதம்" ஆகியவற்றின் வேறுபாட்டை மக்கள் புரிந்துகொள்ளவும் ஒரே மாதிரியான வெளிப்படுத்தல் முறையும் உருவாக்கப்பட உள்ளது. இந்நிபுணர் குழு பரிந்துரைகள் எதிர்காலத்தில் இந்தியாவின் ஓய்வூதிய அமைப்பை புதிய பாதையில் கொண்டு செல்லக்கூடும்.

Related Articles

Related image1
55 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம்.. இந்தியர்களுக்கு குஷியான நியூஸ்.. லிஸ்ட் இதோ!
Related image2
விவசாயிகளுக்கு பொங்கல் பரிசு.. காலையிலேயே குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு.. சூப்பர் அறிவிப்பு!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓய்வூதியம்
முதலீடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை.! நகையா? கோல்டு பிஸ்கட்டா? இந்த நேரத்தில் எது வாங்குவது சிறந்தது?
Recommended image2
FASTag கட்டண உயர்வு.! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.! மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க.!
Recommended image3
Gold Rate: பதட்டமே வேண்டாம்! அடுத்த 9 மாதங்களுக்கு தங்கம் விலையில் மாற்றமில்லை! அடித்து சொல்லும் நிபுணர்கள்!
Related Stories
Recommended image1
55 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம்.. இந்தியர்களுக்கு குஷியான நியூஸ்.. லிஸ்ட் இதோ!
Recommended image2
விவசாயிகளுக்கு பொங்கல் பரிசு.. காலையிலேயே குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு.. சூப்பர் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved