55 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம்.. இந்தியர்களுக்கு குஷியான நியூஸ்.. லிஸ்ட் இதோ!
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026-ல் இந்திய பாஸ்போர்ட் 80வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த முன்னேற்றத்தின் மூலம், இந்தியர்கள் இப்போது 55 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

விசா இல்லா நாடுகள் பட்டியல்
இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் பயணிகளுக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. லண்டன் தலைமையகமாக உள்ள Henley & Partners வெளியிட்டுள்ள Henley Passport Index 2026 பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் தரவரிசை 5 இடங்கள் முன்னேறி 80வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு (2025) இந்தியா 85வது இடத்தில் இருந்தது. இந்த முன்னேற்றத்தின் மூலம் இந்தியர்கள் தற்போது 55 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது Visa-on-Arrival / ETA முறையில் எளிதாகப் பயணம் செய்யலாம். இந்த பட்டியலில் ஆசிய நாடுகள் தொடர்ந்து முன்னணியில் உள்ளன. சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் குடிமக்கள் 192 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும்
இந்திய பாஸ்போர்ட் 2026
அதே போல் ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளார். உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் போட்டியில் ஆசியாவின் ஆதிக்கம் தெளிவாகத் தெரிகிறது. ஆசியாவில் இந்தியர்களுக்கு எளிதாக செல்லக்கூடிய நாடுகளில் பூடான், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா, மாலத்தீவு, இலங்கை ஆகியவை முக்கியமானவை. மத்திய கிழக்கில் கத்தார் (VOA), ஈரான் போன்ற நாடுகளும் உள்ளன. ஆப்ரிக்காவில் மொரிஷியஸ், சேஷல்ஸ், கென்யா, தான்சானியா போன்ற நாடுகள் பயணிகளுக்கு எளிதான வாய்ப்புகளை வழங்குகின்றன. மேலும் கரீபியன் மற்றும் தீவு நாடுகளில் ஜமைக்கா, பார்படோஸ், பிஜி, எல் சால்வடோர் போன்ற இடங்களும் இந்தியர்களுக்கு வசதியான பயண பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
55 நாடுகள் விசா சலுகை
விசா இல்லாத பட்டியலில் அங்கோலா, டொமினிக்கா, கிரெனடா, ஹைட்டி, வனுவாட்டு போன்ற நாடுகள் உள்ளன. Visa-on-Arrival / ETA விருப்பங்களில் கம்போடியா, லாவோஸ், மியான்மர், ஜோர்டான், மடகாஸ்கர் உள்ளிட்ட பல நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. Henley & Partners தலைவர் Christian H. Kaelin கூறுவதுபோல், ஒரு நாட்டின் பாஸ்போர்ட் சக்தி என்பது அதன் அரசியல் நிலைத்தன்மை, தூதரக நம்பகத்தன்மை, பொருளாதார செல்வாக்கு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் இந்த முன்னேற்றம் உலக அளவில் இந்தியாவின் தொடர்புகள் வளர்ந்து வருவதைக் காட்டினாலும், முன்னணி நாடுகளை இன்னும் அதிகமான இருதரப்பு ஒப்பந்தங்கள் தேவை என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

