PPF கணக்கில் நாமினி அப்டேட் செய்ய புதிய விதிமுறை!
PPF account nominee update fee: பிபிஎஃப் கணக்கில் நாமினி விவரங்களை மாற்றுவதற்கு இனி கட்டணம் இல்லை. அரசு சேமிப்பு ஊக்குவிப்பு பொது விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது, இது ஏப்ரல் 2, 2025 முதல் அமலுக்கு வருகிறது.

Public Provident Fund (PPF)
பி.பி.எஃப். விதிமுறையில் மாற்றம்:
உங்கள் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்கில் உள்ள வாரிசுதாரர் விவரங்களை மாற்றுவதற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது. கட்டணமில்லாமல் நாமினி விவரங்களை அப்டேட் செய்யும் வகையில் அரசு சேமிப்பு ஊக்குவிப்பு பொது விதிகள் 2018 இல் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
Finance Ministry on PPF fee
நிதி அமைச்சகம் அறிவிப்பு:
"அரசு சேமிப்பு ஊக்குவிப்பு பொது விதிகள், 2018 இல், அட்டவணை II இல், 'சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம்' என்பதன் கீழ், '(b) நாமினி நியமனத்தை ரத்து செய்தல் அல்லது மாற்றுதல் - ₹ 50' என்பது நீக்கப்படும்," என்று நிதி அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய மாற்றம் ஏப்ரல் 2, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.
Finance Minister Nirmala Sitharaman
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்:
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இது குறித்து வெளியிட்ட எக்ஸ் பதிவில், இதற்காக தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வங்கி திருத்த மசோதா 2025, டெபாசிட் செய்திருக்கும் பணம், பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் லாக்கர்களுக்கு 4 நபர்களை நாமினிகளாகப் பரிந்துரைக்க முடியும்" என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
PPF Nominee
PPF வாரிசுதாரர்கள் நியமனம்:
துரதிர்ஷ்டவசமாக, PPF கணக்கு வைத்திருப்பவர் மறைந்துவிட்டால், கணக்கில் உள்ள நிதி நியமிக்கப்பட்ட நாமினிகளுக்கு மாற்றப்படும். இதனால், பிபிஎஃப் கணக்குகளில் உள்ள வாரிசுதாரர் விவரங்கள் சமீபத்தியதாக இருப்பது முக்கியம்.
What is PPF?
PPF என்றால் என்ன?
PPF என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் நீண்ட கால சிறு சேமிப்பு திட்டமாகும். வரி சேமிப்புக்கும் உதவும் இந்தத் திட்டத்தில் தற்போது 15 ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது. இதில் ஓர் ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. நீண்டகால அடிப்படையில் பணத்தைப் பெருக்க இது ஒரு பயனுள்ள முதலீட்டுத் திட்டமாக உள்ளது. அரசாங்கம் அவ்வப்போது PPF வட்டி விகிதத்தையும் பிற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களையும் மறுபரிசீலனை செய்கிறது.