யுபிஐ பரிவர்த்தனைகள் இனி ஜெட் வேகம்: புதிய விதிகள் ஜூன் 16 முதல் அமல்
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிகள் ஜூன் 16 முதல் அமலுக்கு வருகின்றன. பணம் அனுப்ப மற்றும் பெற எடுக்கும் நேரம் குறைக்கப்பட்டு, பரிவர்த்தனைகள் இன்னும் வேகமாக முடிக்கப்படும்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
நடைமுறையை எளிதாக்கிய யுபிஐ
யுபிஐ பேமெண்ட் சில்லரை தட்டுப்பாட்டை காணாமல் ஆக்கியது. அதேபோல் எங்கும் எப்போதும் ஏடிஎம் தேடி அலையாமல் எளிதாக பொருட்களை வாங்குவதற்கு வழிவகுத்தது. இந்த நிலையில் யுபிஐ ஆப்கள் (UPI Apps) மற்றும் பேங்குகளில் இந்த விதிகளில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) நேரடி மாற்றங்களை கொண்டுவர இருக்கிறது. இதனால் பணம் அனுப்பும் போது சில சமையம் காலதாதம் ஏற்பட்டு பேமெண்ட் தடைபடும் சிரமங்கள் இருக்காது என கூறப்படுகிறது.
புதிய விதிகள் என்ன சொல்கிறது?
ஜூன் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகளின்படி, யுபிஐ பரிவர்த்தனைகளை செய்யும்போது, பணம் அனுப்பப்படுவதற்கும், அந்த பணத்தை பெறவேண்டிய நபர் பெறுவதற்கும் எடுத்து கொள்ளப்படும் நேரத்தில் மாற்றம் ஏற்படுகிறது.கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) மற்றும் பீம் (BHIM) போன்ற ஒட்டுமொத்த யுபிஐ ஆப்களுக்கும் இந்த விதிகள் அமலுக்கு வருகிறது. அதேபோல யுபிஐ ஆப்களுக்கு சேவைகளை கொடுக்கும் பேங்குகளுக்கும் இந்த விதிகள் அமல் செய்யப்பட இருக்கிறது.
பணம் செலுத்தும் வேகம் குறைப்பு
இந்த புதிய விதிகளால் ஜூன் 16ஆம் தேதிக்கு பிறகு யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகவேகமாக முடிக்கப்பட இருக்கிறது. அதாவது, யுபிஐ ஆப்கள் மூலம் ஒரு பரிவர்த்தனையை செய்யும்போது, அது இத்தனை நொடிகளில் முடிக்கப்பட வேண்டும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் டைம் லிமிட்டை வைத்திருக்கிறது. இந்த லிமிட் மேலும் குறைக்கப்பட இருக்கிறது.யுபிஐ பரிவர்த்தனைகளை செய்யும்போது, பணம் அனுப்பப்படுவதற்கும், அந்த பணத்தை பெறவேண்டிய நபர் பெறுவதற்கும் எடுத்து கொள்ளப்படும் நேரத்தில் இந்த விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. ஆகவே, யுபிஐ ஆப்களுக்கு பொருந்துகிறது.
ஜெட் வேகத்தில் பணம் அனுப்பலாம்
முன்னதாக யுபிஐ ஆப்கள் மூலம் பணம் அனுப்புதல் (Debit) மற்றும் பெறுதல் (Credit) ஆகியவற்றுக்கு 30 நொடிகள் ரெஸ்பான்ஸ் டைம்மாக (Response Time) இருந்தது. அதாவது, பணத்தை நீங்கள் அனுப்பிய பிறகு அந்த பரிவர்த்தனை 30 நொடிகளில் முடிக்கப்பட வேண்டும் என்பதை இது குறிக்கிறது. இந்த ரெஸ்பான்ஸ் டைம் ஜூன் 16ஆம் தேதிக்கு பிறகு 15 நொடிகளாக குறைக்கப்படுகிறது.இதனால் இனிமேல் ஜெட் வேகத்தில் பணம் அனுப்பலாம்.
ஜூன் 16 ஆம் தேதி அமல்
ரென்பான்ஸ் டைம் மட்டுமல்லாமல், பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் (Transaction Status), பரிவர்த்தனை ரிவர்ஸ்சல் (Transaction Reversal) மற்றும் முகவரி சரிபார்ப்பு (Validate Address) ஆகியவற்றின் ரெஸ்பான்ஸ் டைம்மும் குறைக்கப்பட இருக்கிறது. யுபிஐ பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்த பிறகு பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் தெரிந்துகொள்ளவதற்கு 30 வினாடிகள் ரென்பான்ஸ் டைம்மாக இருக்கிறது. இது ஜூலை 16ஆம் தேதிக்கு பிறகு 15 வினாடிகளாக குறைக்கப்பட இருக்கிறது.
காத்திருக்க தேவையில்லை
தற்போது பரிவர்த்தனையில் வெற்றிகரமாக முடியாதபட்சத்தில், அந்த தொகை ரிவர்ஸ் செய்ய 30 நொடிகளாக ரென்பான்ஸ் டைம் உள்ளது. இதுவும் 15 வினாடிகளாக குறைக்கப்பட இருக்கிறது. ஆகவே, பரிவர்த்தனை ரிவர்ஸ்சல் 15 வினாடிகளில் முடிக்கப்படுவதால், தொகையைும் அதிவேகமாக திரும்ப பெற்று கொள்ளலாம். இதனால் கையில் போனை வைத்துக்கொண்டு காத்திருக்க தேவையில்லை
எல்லா ஆப்களுக்கும் இது பொருந்தும்
பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர் (Payment Service Provider) ஆப்கள் மூலம் பரிவர்த்தனை செய்யும்போது, ஐஎப்எஸ்சி (IFSC) மற்றும் அக்கவுண்ட் விவரங்கள் அடிப்படையில் முகவரி சரிபார்ப்பு நடக்கிறது. இந்த நேரமும் 15 நொடிகளாக குறைக்கப்பட இருக்கிறது. ஆகவே, ஜூன் 16ஆம் தேதிக்கு பிறகு மேலும் அதிகவேகமாக யுபிஐ பரிவர்த்தனைகள் முடிக்கப்பட இருக்கிறது. இதனால், கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்றை யுபிஐ ஆப்கள் மற்றும் பேங்குகள் இணைந்து ரென்பான்ஸ் டைம்மை உறுதி செய்ய இருக்கின்றன.
இனிமேல் எல்லாம் சரியாகும்
காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை சரிசெய்ய பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் முதல்கட்டமாக பணம் அனுப்பவும் பெறவும் ஆகும் நேரத்தை குறைத்துள்ளதாகவும் National Payments Corporation of India தெரிவித்துள்ளது.