- Home
- Business
- ஏப்ரல் 1 முதல்.. பான் கார்டு வைத்திருப்பவர்கள் அலெர்ட்.. இனி இது அவசியம்.. புதிய சட்டம் அமல்
ஏப்ரல் 1 முதல்.. பான் கார்டு வைத்திருப்பவர்கள் அலெர்ட்.. இனி இது அவசியம்.. புதிய சட்டம் அமல்
புதிய வருமான வரி சட்ட வரைவு 2025-ன் படி, பான் கார்டு விதிகளில் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதன்படி, பண வைப்பு, சொத்து மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கான பான் கட்டாய வரம்புகள் மாற்றப்பட உள்ளன.

பான் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு
புதிய வருமான வரி சட்ட வரைவு 2025 மூலம் பான் கார்டு தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. 2026 ஏப்ரல் 1 முதல் இவை அமலுக்கு வரலாம் என கூறப்படுகிறது.
ஏப்ரல் 1 முதல் புதிய சட்டம் அமல்
ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பண வைப்பு அல்லது பணப்பறிமாற்றங்களுக்கு மட்டுமே பான் கட்டாயமாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய ரூ.50,000 வரம்பு மாற்றப்படலாம்.
பண பரிவர்த்தனை விதி
இது சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு சலுகையாக இருக்கும். ஹோட்டல் அல்லது நிகழ்ச்சி மைய பில் ரூ.1 லட்சத்திற்குக் குறைவாக இருந்தால் பான் தேவையில்லை.
பான் கட்டாயம்
சொத்து வாங்குதல், விற்பனை அல்லது பரிசளிப்பு போன்றவற்றில் பான் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ரூ.5 லட்சத்திற்கு மேற்பட்ட இருசக்கர அல்லது வாகன வாங்குதலிலும் பான் கட்டாயமாக்கப்படுகிறது.
பெரிய பரிவர்த்தனைகள் கண்காணிப்பு
காப்பீட்டு நிறுவனங்களுடன் கணக்கு அடிப்படையிலான உறவு உருவாக்கும்போதும் பான் அவசியமாகும். இந்த மாற்றங்கள் நிர்வாக சிக்கல்களை குறைத்து, பெரிய பரிவர்த்தனைகளை கண்காணிக்க உதவும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

