புதிய வரி மசோதா: எளிமைப்படுத்தப்பட்ட வரிவிதிப்பு முறை.. யாருக்கெல்லாம் நன்மை?
புதிய வரி மசோதா இந்திய வரி அமைப்பை எளிமைப்படுத்தி, வரி செலுத்துவோருக்கு பல சலுகைகளை வழங்குகிறது. டிஜிட்டல் வரி விதிகள், தகராறு தீர்வுகள் மற்றும் வரி செலுத்துநர்களை அதிகரிக்கும் வழிகள் உள்ளிட்ட பல மாற்றங்கள் இடம்பெறும்.

வருமான வரி மசோதா 2025
புதிய வரி மசோதாவின் நோக்கம் இந்திய வரி அமைப்பை எளிமையாக்கும். வரி சலுகை நிலைகள், டிஜிட்டல் வரி விதிகள், தகராறு தீர்வுகள், தரவு மற்றும் தொழில்நுட்பம் மூலம் வரி செலுத்துநர்களை அதிகரிக்கும் வழிகள் உள்ளிட்ட பல இதில் மாற்றங்கள் இடம்பெறும். பழைய மசோதாவில் உள்ள குழப்பங்களை தவிர்க்க, ஒரே திருத்தப்பட்ட பதிப்பு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறினர்.
புதிய வருமான வரி விதிகள்
31 உறுப்பினர்கள் கொண்ட குழு 4,575 பக்க அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் 32 முக்கிய மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, ‘பயனடைபவர்’ என்ற வரையறையில் திருத்தம், நிறுவனங்களுக்கு டிவிடெண்ட் வருவாய் வரி விலக்கு, மாநகராட்சி வரி கழித்த பின் 30% ஸ்டாண்டர்ட் விலக்கு, மற்றும் வாடகைக்கு விடப்படும் சொத்து கட்டுமானத்திற்கு முன் செலுத்திய வட்டிக்கு விலக்கு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
வரி தளர்வுகள்
தனிநபர் வரி செலுத்துனர்களுக்காகவும் பல பரிந்துரைகள் உள்ளன. தவறுதலாக இல்லாமல் ஏற்பட்ட பிழைகளுக்கு அபராத விலக்கு, ITR தாமதமாக தாக்கல் செய்தாலும் சிறு வரி செலுத்துபவர்களுக்கு ரீஃபண்ட் வழங்குதல், ‘Nil’ TDS சான்றிதழ் வழங்குதல் ஆகியவை அடங்கும். மேலும், NPA (செலுத்தப்படாத கடன்) வரையறையை தெளிவுபடுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குழு
நிறுவனங்கள் மற்றும் மத-தன்னார்வ அறக்கட்டளைகளுக்கான விதிகளிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடாத நன்கொடைகள் வந்தாலும், அவர்களின் வரிவிலக்கு உரிமையை இழக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும், புதிய சட்டத்தில் 1961 சட்டத்தின் சில குறிப்புகளை நீக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிய சட்டம் முழுமையாக இருந்து, பழைய சட்டத்தை பார்த்து விளக்கம் தேவைப்படாது என்று கூறுகின்றனர்.