பொதுமக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. பெட்ரோல் டீசல் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போரால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நயாரா பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்து வருகின்றன. இதற்கு ஈரான் தரப்பிலும் கடுமையான எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த போரால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய், ஏரிவாயு சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் புக் செய்து வாங்குவதே பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை தட்டுப்பாடு என்று அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளதாக கூறி வருகிறது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை மற்றும் விலை ஏற்றம் காரணமாக இந்தியாவில் முன்னணி எரிவாயு நிறுவங்களில் ஒன்றான நயாரா பெட்ரோல், டீசல் விலையை ஏற்றியுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ரூ.107.93க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.97.22க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஆனால் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் ரிலையன்ஸ் பெயரில் இயங்கும் பங்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 20ம் தேதி ப்ரீமியம் பெட்ரோல் விலை மட்டும் ரூ.2 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

