- Home
- Business
- முகேஷ் அம்பானியின் புதிய நிறுவனம்.. மும்பை அலுவலகத்தின் மாத வாடகை மட்டும் இத்தனை லட்சமா?
முகேஷ் அம்பானியின் புதிய நிறுவனம்.. மும்பை அலுவலகத்தின் மாத வாடகை மட்டும் இத்தனை லட்சமா?
முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ ஃபைனான்சியல் நிறுவனம் செலுத்திய வாடகை விவரம் தற்போது வெளியாகியுள்ளது

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் மும்பையில் ஒரு பெரிய அலுவலகத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ ஃபைனான்சியல் நிறுவனம் செலுத்திய வாடகை விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த வாடகை தொகை லட்சக்கணக்கில் உள்ளது.
jio finance
இந்த அலுவலகம் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள மேக்கர் மேக்சிட்டியின் முதல் தளத்தில் உள்ளது. இப்பகுதியில் NSE மற்றும் SEBI அலுவலகங்களும் உள்ளன. இப்பகுதியில் சதுர அடிக்கு 400 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் புதிய நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீஸஸ் தனது தாய் நிறுவனத்தின் சுமார் 1 லட்சம் கோடி மதிப்பிலான 6.1 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
ஜியோவின் இந்த அலுவலகத்திற்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு, மாத வாடகை, 55.49 லட்சம் ரூபாய். மீதமுள்ள இரண்டு ஆண்டுகளில், மாத வாடகை ரூ.63.81 லட்சம் ஆகும்.
ambani
ஜியோ ஃபைனான்சியல் நிறுவனத்திற்காக 83.23 லட்சம் டெபாசிட் தொகையையும் செலுத்தியுள்ளனர். இதற்காக அவர்களுக்கு ஏழு கார் பார்க்கிங் இடங்கள் வழங்கப்படும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.