MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Money Saving Tips: இல்லத்தரசிகளே பணம் மிச்சப்படுத்தணுமா? செலவை குறைக்க இந்த Tips-ஐ Follow பண்ணுங்க!

Money Saving Tips: இல்லத்தரசிகளே பணம் மிச்சப்படுத்தணுமா? செலவை குறைக்க இந்த Tips-ஐ Follow பண்ணுங்க!

Money Saving Tips: மாத சம்பளம் வந்த சில நாட்களிலேயே பணம் குறைந்து விடுகிறதா? அப்படியானால் தினசரி தேவையற்ற ஒரு சில செலவுகளை கண்டறிந்து படிப்படியாக குறைப்பது நீண்ட காலத்தில் நல்ல பலனை தரும்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 03 2026, 04:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தினசரி செலவுகளை எழுதுங்கள்
Image Credit : pinterest

தினசரி செலவுகளை எழுதுங்கள்

காலை காபி முதல் ஆன்லைன் ஆர்டர் வரை தினசரி செய்யும் ஒவ்வொரு செலவையும் தவறாமல் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் பணம் எங்கு அதிகமாக செல்கிறது என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம். பல செலவுகள் தனித்தனியாகப் பார்க்கும்போது சிறிய தொகையாகத்தான் தெரியும். ஆனால், இவை அனைத்தும் மாத இறுதியில் சேரும்போது கணிசமான தொகையாக மாறிவிடும்.

இதற்காக பெரிய கணக்கு புத்தகமெல்லாம் தேவையில்லை. மொபைலில் உள்ள Notes, Excel Sheet அல்லது செலவுகளைப் பதிவு செய்யும் ஏதேனும் ஒரு செயலியை பயன்படுத்தலாம். குறிப்பாக செலவுகளை உணவு, போக்குவரத்து, ஷாப்பிங், பொழுதுபோக்கு, வீட்டு செலவு, ஆன்லைன் ஆர்டர் எனப் பிரித்து எழுதுவது இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மாத பட்ஜெட் போடுங்கள்
Image Credit : pinterest

மாத பட்ஜெட் போடுங்கள்

மாத தொடக்கத்திலேயே வீட்டு வாடகை, மளிகை, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கு ஒரு தொகையை ஒதுக்குங்கள். மீதமுள்ள பணத்தை சேமிப்பு மற்றும் பிற தேவைகளுக்கு பயன்படுத்துவது சிறந்தது.

Related Articles

Related image1
Money Saving Tips: மாசக் கடைசியில் பர்ஸ் காலியாகிடுதா? சம்பளம் கையில் நிற்க இந்த 3 பணச்சேமிப்பு டிப்ஸ் போதும்
Related image2
Money Saving Habits: இந்த 5 பழக்கங்கள் உங்களை பணக்காரர் ஆக்கும்!
36
வெளியே சாப்பிடுவதை குறைக்கலாம்
Image Credit : pinterest

வெளியே சாப்பிடுவதை குறைக்கலாம்

தினமும் ஹோட்டல் அல்லது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவது நமக்கு தெரியாமலேயே அதிக செலவை ஏற்படுத்தும். முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது பணத்தை மிச்சப்படுத்தும்.

46
மளிகை பொருட்களை பட்டியல் போட்டு வாங்குங்கள்
Image Credit : pinterest

மளிகை பொருட்களை பட்டியல் போட்டு வாங்குங்கள்

கடைக்கு செல்லும் முன்பே வீட்டிற்கு தேவையான பொருட்களின் பட்டியலை தயாரித்துக்கொள்வது தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க உதவும். பட்டியலில் இல்லாத பொருட்களை அவசியமில்லாமல் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல், ஒவ்வொரு முறையும் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளுக்குச் செல்வதற்கு பதிலாக, தேவையான பொருட்களை அருகில் உள்ள சிறிய கடைகளிலேயே வாங்க முயற்சி செய்யலாம்.

பெரிய கடைகளில் பல்வேறு பொருட்கள் கண்ணில் படுவதால், இது தேவைப்படலாம், இது ஆஃபரில் இருக்கிறது என்று நினைத்து பட்டியலில் இல்லாத பொருட்களையும் வாங்கும் வாய்ப்பு அதிகம். இதனால் சிறியதாகத் தோன்றும் கூடுதல் செலவுகள் மாத இறுதியில் பெரிய தொகையாக மாறிவிடலாம்.

56
ஆன்லைன் ஷாப்பிங்கில் அவசரப்படாதீர்கள்
Image Credit : pinterest

ஆன்லைன் ஷாப்பிங்கில் அவசரப்படாதீர்கள்

  1. பிடித்த பொருளை உடனே வாங்குவதற்கு பதிலாக, அது உண்மையில் தற்போது தேவையா? என்று சிந்தித்து வாங்குவது சிறந்தது.
  2. அதேபோல், அருகிலுள்ள இடங்களுக்கு நடந்து செல்வது, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது போன்றவை எரிபொருள் செலவை குறைக்க உதவும்.
  3. தேவைக்கு அதிகமாக சமைத்து, மீதமான உணவை வீணாக்குவதை தவிர்க்கவும்.
66
முதலில் சேமிப்பு, பிறகு செலவு
Image Credit : pinterest

முதலில் சேமிப்பு, பிறகு செலவு

சம்பளம் வந்தவுடன் மீதம் இருந்தால் சேமிப்போம் என்று நினைக்காமல், முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்புக்கு ஒதுக்குங்கள். பின்னர் மீதமுள்ள தொகையில் மாத செலவுகளை திட்டமிடுவது சிறந்தது.

சிறிய மாற்றங்களே பெரிய சேமிப்பை உருவாக்கும். ஒரே நாளில் அனைத்து செலவுகளையும் குறைக்க முயற்சிப்பதைவிட, தினசரி தேவையற்ற ஒரு சில செலவுகளை கண்டறிந்து படிப்படியாக குறைப்பது நீண்ட காலத்தில் நல்ல பலனை தரும்.

முக்கியமாக, எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதைவிட, அந்தப் பணம் எங்கு செல்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதே பண மேலாண்மையின் முதல் படி. தினமும் சில நிமிடங்கள் செலவிட்டு கணக்கு வைத்துக்கொள்ளும் இந்தச் சிறிய பழக்கம், காலப்போக்கில் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி, மாதாந்திர சேமிப்பை அதிகரிக்க உதவும்.

குறிப்பு: இது பொதுவான கருத்துகள் மட்டுமே. அன்றாட வாழ்க்கையில் பணத்தை மிச்சப்படுத்த உதவும் எளிய வழிகளை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள். ஒவ்வொருவரின் வருமானம், குடும்பத் தேவைகள் மற்றும் செலவு முறைக்கு ஏற்ப சேமிப்பு திட்டத்தை மாற்றியமைத்துக் கொள்வது அவசியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

V
Vishnupriya
பணம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
US Bond Yield: இந்திய பங்குச்சந்தைக்கு புது சிக்கல்! பின்னணியில் அமெரிக்க பத்திரங்களா?
Recommended image2
Airtel Family Plan: ஒரே ரீசார்ஜ் போதும்! 4 சிம்களுக்கு அன்லிமிட்டெட் கால்ஸ், 5G டேட்டா செம ஆஃபர்!
Recommended image3
DA Hike: பண்டிகைக்கு முன் ஜாக்பாட்! மத்திய அரசு ஊழியர்களுக்கு 64% அகவிலைப்படி? எப்போது கிடைக்கும்?
Related Stories
Recommended image1
Money Saving Tips: மாசக் கடைசியில் பர்ஸ் காலியாகிடுதா? சம்பளம் கையில் நிற்க இந்த 3 பணச்சேமிப்பு டிப்ஸ் போதும்
Recommended image2
Money Saving Habits: இந்த 5 பழக்கங்கள் உங்களை பணக்காரர் ஆக்கும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved