MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Money Saving Tips: மாசக் கடைசியில் பர்ஸ் காலியாகிடுதா? சம்பளம் கையில் நிற்க இந்த 3 பணச்சேமிப்பு டிப்ஸ் போதும்

Money Saving Tips: மாசக் கடைசியில் பர்ஸ் காலியாகிடுதா? சம்பளம் கையில் நிற்க இந்த 3 பணச்சேமிப்பு டிப்ஸ் போதும்

Money Saving Tips: மாதக் கடைசியில் பணம் இல்லாமல் சிரமப்படுகிறீர்களா? 24 மணி நேர விதி, கணக்கு பிரிப்பு உள்ளிட்ட 3 எளிய பணச்சேமிப்பு வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 23 2026, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மாதக் கடைசியில் பணம் இல்லாமல் போகாமல்
Image Credit : ChatGPT

மாதக் கடைசியில் பணம் இல்லாமல் போகாமல்

சம்பளம் வந்தவுடன் மொத்த பணத்தையும் செலவு செய்யக்கூடிய தொகையாக நினைப்பது மாதக் கடைசியில் சிக்கலை ஏற்படுத்தலாம். வாடகை, இஎம்ஐ, மின்சாரம், உணவு, போக்குவரத்து போன்ற தவிர்க்க முடியாத செலவுகளுக்கு முதலில் பணத்தை ஒதுக்க வேண்டும். அதன் பிறகு சேமிப்பு மற்றும் விருப்ப செலவுகளுக்கான தொகையை பிரிப்பது பணத்தை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த உதவும். இதில் முதலில் முயற்சி செய்ய வேண்டியது 24 மணி நேர விதி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சம்பளம் சேமிப்பது எப்படி?
Image Credit : our own

சம்பளம் சேமிப்பது எப்படி?

ரூ.2,000-க்கு மேல் மதிப்புள்ள, உடனடியாக தேவையில்லாத பொருளை வாங்க வேண்டும் என்ற ஆசை வந்தால், உடனே பணம் செலுத்தாமல் 24 மணி நேரம் காத்திருக்கலாம். ஒரு நாள் கழித்து அந்த பொருள் உண்மையில் தேவையா அல்லது அந்த நேரத்தில் ஏற்பட்ட ஆசையால் வாங்க நினைத்தோமா என்று மீண்டும் யோசிக்கலாம். இந்த சிறிய இடைவெளி தேவையற்ற வாங்குதல்களை குறைக்க உதவும். குறிப்பாக இணையதளங்களில் அடிக்கடி பொருட்களை வாங்குபவர்களுக்கு இந்த விதி பயனுள்ளதாக இருக்கும்.

School Holidays: ஆகஸ்ட் கடைசி வாரம் 5 நாள் லீவு! எந்தெந்த தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை?

Related Articles

Related image1
Fixed Deposit: 666 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்: 8.25% வட்டி தரும் வங்கி.. செம ஆஃபர்!
Related image2
TN Farmers: மழை லேட் ஆனாலும் கவலை வேண்டாம்.. செப்டம்பரில் இந்த பயிர்களைப் போட்டா நல்ல லாபம் நிச்சயம்!
35
மாத செலவு கட்டுப்பாடு
Image Credit : our own

மாத செலவு கட்டுப்பாடு

அடுத்ததாக செலவுகளுக்கான பணத்தை பிரித்து வைப்பது முக்கியம். வாடகை, இஎம்ஐ மற்றும் பில்களுக்கான தொகையை ஒரு தனி கணக்கில் வைத்துக்கொள்ளலாம். தினசரி உணவு, பயணம் மற்றும் சிறிய செலவுகளுக்கென மற்றொரு கணக்கை பயன்படுத்தலாம். இதனால் செலவு செய்யக்கூடிய பணம் எவ்வளவு இருக்கிறது என்பது தெளிவாக தெரியும். ஒரு கணக்கில் இருக்கும் மொத்த தொகையையும் செலவு செய்யும் பழக்கத்தையும் இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

45
பண மேலாண்மை
Image Credit : our own

பண மேலாண்மை

மூன்றாவதாக சம்பள உயர்வு அல்லது போனஸ் கிடைக்கும்போது முழுத் தொகையையும் வாழ்க்கைமுறை செலவுகளுக்கு பயன்படுத்தாமல் இருப்பது நல்ல பழக்கம். கூடுதல் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிப்பு அல்லது உங்கள் நிதி இலக்குகளுக்கு ஒதுக்கலாம். முதலீடு செய்யும் முன் அதன் அபாயங்கள், கால அளவு மற்றும் உங்கள் நிதி நிலையை புரிந்துகொள்வது அவசியம். குறிப்பாக எஸ்ஐபி போன்ற முதலீடுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும் என்று கருதக்கூடாது.

55
தேவையற்ற செலவுகளை குறைப்பது எப்படி
Image Credit : our own

தேவையற்ற செலவுகளை குறைப்பது எப்படி

இதனுடன் பயன்படுத்தாத ஓடிடி மற்றும் செயலி சந்தாக்களை ரத்து செய்வது, சிறியதாக இருந்தாலும் தொடர்ந்து சேமிப்பது, வாடகை மற்றும் காப்பீடு போன்ற வழக்கமான செலவு தொகை தானியங்கி பணப்பரிமாற்றம் அமைப்பது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். எதிர்பாராத செலவுகளுக்காக தனியாக அவசரகால நிதியையும் உருவாக்குவது நல்லது. முதலில் ரூ.500 அல்லது ரூ.1,000 என்று சிறிய தொகையில் தொடங்கினாலும் பரவாயில்லை. முக்கியமானது, “முதலில் சேமிப்பு, பிறகு செலவு” என்ற பழக்கத்தை உருவாக்குவதுதான்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பணம்
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fixed Deposit: 666 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்: 8.25% வட்டி தரும் வங்கி.. செம ஆஃபர்!
Recommended image2
TN Farmers: மழை லேட் ஆனாலும் கவலை வேண்டாம்.. செப்டம்பரில் இந்த பயிர்களைப் போட்டா நல்ல லாபம் நிச்சயம்!
Recommended image3
இனி விளம்பரங்களுக்கு நடுவேதான் சீரியலா? புலம்பும் இல்லத்தரசிகள்.. டிவி சேனல்களுக்கான கெடுவை நீக்கிய மத்திய அரசு!
Related Stories
Recommended image1
Fixed Deposit: 666 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்: 8.25% வட்டி தரும் வங்கி.. செம ஆஃபர்!
Recommended image2
TN Farmers: மழை லேட் ஆனாலும் கவலை வேண்டாம்.. செப்டம்பரில் இந்த பயிர்களைப் போட்டா நல்ல லாபம் நிச்சயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved