- Home
- இந்தியா
- School Holidays: ஆகஸ்ட் கடைசி வாரம் 5 நாள் லீவு! எந்தெந்த தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை?
School Holidays: ஆகஸ்ட் கடைசி வாரம் 5 நாள் லீவு! எந்தெந்த தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை?
School Holidays: ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் மிலாது நபி, ஓணம், ரக்ஷா பந்தன் போன்ற பல பண்டிகைகளுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை இங்கே பார்க்கலாம்.
16

Image Credit : Getty
5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆகஸ்ட் 25-ம் தேதியிலிருந்து இந்த விடுமுறை நாட்கள் தொடங்குகின்றன.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
26
Image Credit : social media
நீண்ட விடுமுறை
சமீபத்தில் வெளியான விடுமுறை அறிவிப்பின்படி, மிலாடி நபி, ஓணம், ரக்ஷா பந்தன் மற்றும் வரலட்சுமி விரதம் போன்ற பண்டிகைகள் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் கொண்டாடப்படுகின்றன. இதனால் ஆகஸ்ட் 25, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பள்ளிகள் மூடப்படும். 29 மற்றும் 30-ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால், பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு நீண்ட விடுமுறையாக அமையும்.
36
Image Credit : stockPhoto
பல்வேறு மாநிலங்களில் லீவு
இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதன் காரணமாக, விடுமுறைப் பட்டியலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக இருக்கும். அந்த வகையில், ஆகஸ்ட் 25 முதல் 30-ம் தேதி வரை எந்தெந்த மாநிலங்களில் எப்போது விடுமுறை என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
46
Image Credit : social media
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்
ஆகஸ்ட் 28-ம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகை வருகிறது. இந்த விடுமுறை பல மாநிலங்களில் உள்ளது. மேற்கு வங்கத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் அன்று விடுமுறை. அதே நாளில் வரலட்சுமி விரதமும் வருவதால், பல மாநிலங்களில் ஆகஸ்ட் 28 விடுமுறை தினமாக உள்ளது.
56
Image Credit : social media
அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 25-ம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காகப் பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை. அதேபோல, ஆகஸ்ட் 26-ம் தேதி திருவோணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
66
Image Credit : Gemini AI
5 நாட்கள் தொடர் விடுமுறை
ஆகஸ்ட் 29 மற்றும் 30-ம் தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை. ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை. பல மாநிலங்களில் சனிக்கிழமையும் விடுமுறை என்பதால், மாணவர்கள் ஆகஸ்ட் 27-ம் தேதியைத் தவிர, தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறையை அனுபவிக்கலாம்.
Latest Videos

