சேமிப்பை பாதுகாக்க.. நடுத்தர மக்களுக்கு ஏற்ற எல்ஐசியின் தங்கமான பாலிசிகள்
2025-ல், எல்ஐசி சேமிப்பு மற்றும் பாதுகாப்பை வழங்கும் பல புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்கள் பாதுகாப்பு, வருமானம் மற்றும் வரிச் சலுகைகளை வழங்குகின்றன.

எல்ஐசி சிறந்த திட்டங்கள்
சேமிப்பும், பாதுகாப்பும் ஒரே நேரத்தில் வேண்டும் என்றால், எல்ஐசி திட்டங்கள் இன்னும் பலரின் முதல் தேர்வாகவே உள்ளன. லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) தனது நம்பகத்தன்மை மற்றும் நீண்டகால பலன்களுக்காக பிரபலமானது. 2025-ல், எல்ஐசி சில புதிய காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியதுடன், ஏற்கனவே உள்ள பிரபல திட்டங்களையும் மேம்படுத்தியுள்ளது. இவை முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பையும், நல்ல வருமான வாய்ப்பையும் சமநிலையாக வழங்குகின்றன.
உயர் பாதுகாப்பு தேடுபவர்களுக்கு ‘எல்ஐசி இன்சூரன்ஸ் கவர் (பிமா கவாச் - Bima Kavach)’ 2025 இறுதியில் அறிமுகமான இந்த டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம், அதிக காப்பீட்டு தொகை விரும்பும் குடும்பங்களுக்கு ஏற்றது. இதில் ரூ.2 கோடி அல்லது அதற்கு மேல் வரை சம் அஷ்யூர்டு தேர்வு செய்யலாம். மேலும், 100 வயது வரை காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. குடும்பத்தின் எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு வலுவான தேர்வாக கருதப்படுகிறது.
ஓய்வுக்கால வருமானத்திற்கான சிறந்த திட்டம் நியூ ஜீவன் சாந்தி (New Jeevan Shanti) ஆகும். இந்த திட்டம் ஓய்வுக்கால பென்ஷன் தேவைக்காக உள்ளது. ஒரே முறை முதலீடு (Lump Sum) செய்தால், வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெற முடியும். குறைந்தபட்ச முதலீடு ரூ.1.5 லட்சம். 5 ஆண்டுகள் லாக்-இன் காலத்திற்குப் பிறகு, மாதந்தோறும் பென்ஷன் தொடங்கும். முதலீட்டு தொகை அதிகரித்தால், பென்ஷன் தொகையும் அதிகரிக்கும்.
எல்ஐசி காப்பீட்டு பாலிசி
நடுத்தர வருமானத்தினருக்கான நம்பகமான தேர்வு எல்ஐசி ஜீவன் ஆனந்த் ஆகும். இந்த திட்டம் குறைந்த பிரீமியத்தில் அதிக பலன் தரும் வகையில் உள்ளது. உதாரணமாக, 35 வயதில் ரூ.5 லட்சம் உத்தரவாதத் தொகை-க்கு 35 ஆண்டுகள் பாலிசி எடுத்தால், ஆண்டு பிரீமியம் சுமார் ரூ.16,300 ஆக இருக்கும். காலாவதியான போது போனஸுடன் சேர்த்து சுமார் ரூ.25 லட்சம் வரை பெற வாய்ப்பு உள்ளது. வரி சலுகைகளும் இதில் கிடைக்கும்.
உயர் வருமானத்தினருக்கான பாதுகாப்பான முதலீடு ஜீவன் சிரோமணி (Jeevan Shiromani) ஆகும். இந்த திட்டம் அதிக வருமானம் கொண்டவர்களை குறிவைக்கிறது. இது இணைக்கப்படாத ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஆகும். 30 வயதில் ரூ.1 கோடி உறுதியளிக்கப்பட்ட தொகை-க்கு 20 ஆண்டு பாலிசி எடுத்தால், 16 ஆண்டுகள் மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும். பாதுகாப்புடன் கூடிய நீண்டகால நிதி திட்டமிடலுக்கு இது ஏற்றது.
மொத்தத்தில், எல்ஐசி திட்டங்கள் வெறும் வருமானத்துக்காக மட்டுமல்ல. வாழ்க்கை பாதுகாப்பு, வரி நன்மைகள் மற்றும் நீண்டகால நிதி நிலைத்தன்மைக்காகவும் உதவுகின்றன. முதலீடு செய்யும் முன், உங்கள் வயது, இலக்குகள் மற்றும் நிதி தேவைகளை கவனத்தில் கொண்டு திட்டத்தை தேர்வு செய்வது முக்கியம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

