MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Jonnagiri Gold Mine: அசோகர் காலத்து தங்க புதையல்! தோண்டத் தோண்ட தங்கம்! ஆண்டுக்கு 2 டன்! எங்க தெரியுமா?

Jonnagiri Gold Mine: அசோகர் காலத்து தங்க புதையல்! தோண்டத் தோண்ட தங்கம்! ஆண்டுக்கு 2 டன்! எங்க தெரியுமா?

Jonnagiri Gold Mine: ஆந்திராவின் ஜொன்னகிரியில் தங்கச் சுரங்க திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். இங்கு தோண்டத் தோண்ட ஆண்டுக்கு 2 டன் தங்கம் எடுக்க இலக்கு நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Jun 25 2026, 07:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆந்திராவில் தங்கச் சுரங்க திட்டம்
Image Credit : chatgpt

ஆந்திராவில் தங்கச் சுரங்க திட்டம்

கோலார் தங்க வயலுக்கு பிறகு இந்தியாவில் ஒரு புதிய பொற்காலம் தொடங்கியுள்ளது. ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தின் ஜொன்னகிரியில் (இனி சுவர்ணகிரி) தங்கச் சுரங்கத் திட்டத்தை அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். 'ராயலசீமாவை மீண்டும் ரத்தின பூமியாக மாற்றுவோம்' என்று அவர் உறுதியளித்தார். ஒரு காலத்தில் வறட்சிக்குப் பெயர் போன இதே மண்ணில்தான் தங்கம் விளைந்தது. இப்போது நாம் பேசும் 'ஜொன்னகிரி' என்ற ஊரின் உண்மையான பெயர் 'சுவர்ணகிரி'.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அசோகர் காலத்து தங்கப் புதையல்
Image Credit : gemini ai

அசோகர் காலத்து தங்கப் புதையல்

மௌரியப் பேரரசர் அசோகர், தென்னிந்தியாவை ஆட்சி செய்ய நிறுவிய நான்காவது தலைநகரம்தான் இந்த சுவர்ணகிரி. அதாவது, இன்றைய ஜொன்னகிரி. இந்தப் பகுதிக்குச் சென்றால், அசோகர் காலத்து 'எர்ரகுடி பாறைக் கல்வெட்டுகளை' இன்றும் பார்க்கலாம். மௌரியர்கள் காலத்திலேயே இங்குள்ள மலைகளிலும், மண்ணிலும் தங்கம் இருந்ததால், இதற்கு 'சுவர்ணகிரி' எனப் பெயர் சூட்டினர். அசோகருக்குப் பிறகு வந்த சாதவாகனர்கள், விஜயநகர மன்னர்கள் காலத்திலும் இந்தப் பகுதி செல்வச் செழிப்புடன் இருந்தது. காலப்போக்கில், சுவர்ணகிரி என்பது ஜொன்னகிரியாக மாறிவிட்டது. ஆனால், மண்ணுக்குள் மறைந்திருந்த தங்கம் இப்போது மீண்டும் வெளிவந்துள்ளது.

Related Articles

Related image1
Gold Vault: பனிமலையின் கீழ் 148 டன் தங்கம்... உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ரகசிய பங்கரின் பின்னணி!
Related image2
Gold Mine : இந்தியாவின் அடுத்த KGF இந்த மாநிலமா? மண்ணுக்கடியில் கொட்டிக்கிடக்கும் 50 டன் தங்கம்!
34
இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம்
Image Credit : Asianet News

இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம்

'ஜியோமைசூர் சர்வீசஸ்' நிறுவனம் சுமார் ரூ.405 கோடி முதலீட்டில் இந்த வர்த்தக சுரங்கப் பணிகளைத் தொடங்கியுள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், ஜொன்னகிரியின் பெயரை அதிகாரப்பூர்வமாக 'சுவர்ணகிரி' என மாற்றுவதாகவும் அவர் அறிவித்தார். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் தனியார் உள்நாட்டு தங்கச் சுரங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

44
ஆண்டுக்கு 2 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படும்
Image Credit : Asianet News

ஆண்டுக்கு 2 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படும்

இந்தச் சுரங்கம் மூலம், முதலில் ஆண்டுக்கு 400 முதல் 600 கிலோ தங்கமும், பின்னர் ஆண்டுக்கு 2 டன் தங்கமும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலம் எதிர்காலத்தில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இங்கு கிடைக்கும் தங்கத்தை வேறு இடத்திற்குக் கொண்டு சென்று நகைகள் செய்வதற்குப் பதிலாக, இங்கேயே ஒரு 'நகை பூங்கா' (Jewellery Park) அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இதன் மூலம், ஒருகாலத்தில் இருந்த சுவர்ணகிரியின் பெருமை மீண்டும் நம் கண்முன்னே வரப்போகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தங்கம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Farmers: மழை லேட் ஆனாலும் கவலை வேண்டாம்.. செப்டம்பரில் இந்த பயிர்களைப் போட்டா நல்ல லாபம் நிச்சயம்!
Recommended image2
இனி விளம்பரங்களுக்கு நடுவேதான் சீரியலா? புலம்பும் இல்லத்தரசிகள்.. டிவி சேனல்களுக்கான கெடுவை நீக்கிய மத்திய அரசு!
Recommended image3
Axis Credit Card: ஆக்சிஸ் கிரெடிட் கார்டு யூசர்களுக்கு ஷாக் நியூஸ்! ஆகஸ்ட் 28 முதல் புது ரூல்ஸ்!
Related Stories
Recommended image1
Gold Vault: பனிமலையின் கீழ் 148 டன் தங்கம்... உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ரகசிய பங்கரின் பின்னணி!
Recommended image2
Gold Mine : இந்தியாவின் அடுத்த KGF இந்த மாநிலமா? மண்ணுக்கடியில் கொட்டிக்கிடக்கும் 50 டன் தங்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved