கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலை இனி செல்லாதா? புதிய விதியை அமல்படுத்தியதா ஆர்பிஐ?
கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலை இனி செல்லாது என ஆர்பிஐ உத்தரவு பிறப்பித்ததாக தகவல் பரவி வருகிறது. இது உண்மையா? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
Bnak Cheques
காசோலைகள்
இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் வங்கிகளின் சேவை இன்றியமையாததாக உள்ளது. பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய, அரசு திட்டங்களின் பலன்களை பெற, ஓய்வூதியம் பெற என அனைத்து வகைகளுக்கும் வங்கிகளின் தேவை அதிகரித்துள்ளது. இப்போது ஆன்லைன் பணபரிவர்த்தனை அதிகரித்து இருந்தாலும் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செக் (Cheque) எனப்படும் காசோலைகள் மூலமே செய்யப்படுகின்றன.
வங்கிகளில் பணபரிவர்த்தனைக்கு காசோலைகள் முக்கியமான எழுத்துப்பூர்வ உத்தரவாதமாக கருதப்படுகிறது. காசோலை மூலம் பணம் செலுத்தும் போதும், பணம் எடுக்கும்போதும் பெயர், வங்கி விவரங்கள் மற்றும் மாற்ற வேண்டிய தொகை, அனுப்புவரின் கையெழுத்து ஆகியவை காசாலையில் இடம்பெற்றிருக்கும்.
Cheques Rules
கருப்பு மை காசோலைகள்
இந்நிலையில், காசோலை தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய விதிகள் ஒன்றை பிறப்பித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வருகின்றன. அதாவது ''மோசடிகளை தடுக்கும் வகையில், பாதுகாப்பு காரணங்களுக்காக கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலைகள் இந்த மாதம் முதல் செல்லாது. இனிமேல் நீலம் மற்றும் பச்சை மையால் எழுதப்பட்ட காசோலைகளை மட்டுமே வங்கிகள் ஏற்றுக் கொள்ளும்'' என்று ஆர்பிஐ உத்தரவிட்டதாக தகவல்கள் வேகமாக பரவின.
காசோலைகளில் கருப்பு மையால் எழுதப்படும் எழுத்துகளை எளிதில் அழித்து விட முடியும் என்பதால் நீலம் மற்றும் பச்சை மையால் எழுதப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆகவே கருப்பு மையால் எழுதப்படும் காசோலைகளை வங்கிகள் நிராகரிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதாக தகவல்கள் கூறின.
அப்படியானால் இனி கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலைகள் செல்லாதா? என வங்கி வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் ஆழந்தனர்.
300 யூனிட் இலவச மின்சாரம், ரூ 78000 வரை மானியம்; மோடி அரசின் மிகப்பெரிய அறிவிப்பு!
RBI Cheques
தவறான செய்தி
இந்நிலையில், கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலைகள் இந்த மாதம் முதல் செல்லாது என்ற எந்த ஒரு உத்தரவையும் ஆர்பிஐ பிறப்பிக்கவில்லை என்றும் இது தொடர்பாக போலி செய்திகள் உலா வருவதும் இப்போது தெரியவந்துள்ளது.
ஆர்பிஐ வெப்சைட்டுகளிலும் சரி, சமூக ஊடகங்கள் வாயிலாகவும் சரி ஆர்பிஐ காசோலை தொடர்பாக எந்த ஒரு உத்தரவையும், புதிய விதிகளையும் வெளியிடவில்லை. ஆகவே காசோலைகள் தொடர்பாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் முழுக்க முழுக்க தவறானது என தெரியவருகிறது.
RBI Rules About Cheques
ரிசர்வ் வங்கி விதி என்ன சொல்கிறது?
''காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. ஆகவே யாரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்'' என்று இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காசோலையில் எழுதப்படும் தகவல்கள் தெளிவாக தெரியும் வகையிலான மையையும், மோசடி செய்ய முடியாத வகையில், அழிக்காத முடியாத மையையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்று தான் ரிசர்வ் வங்கியின் விதிகள் சொல்கிறது. ஆனால் காசோலைகளை நிரப்ப இந்த குறிப்பிட்ட கலர் மைகளை தான் பயன்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி எந்த இடத்திலும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.