MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஈரான் போர் எதிரொலி: மதுபிரியர்கள் தலையில் இடி.! இந்தியாவில் கடுமையாக உயரப்போகும் மதுபானங்கள் விலை.!

ஈரான் போர் எதிரொலி: மதுபிரியர்கள் தலையில் இடி.! இந்தியாவில் கடுமையாக உயரப்போகும் மதுபானங்கள் விலை.!

Beer Price Hike in India : ஈரான் போரினால் இந்தியாவில் பீர் மற்றும் குளிர்பானங்களின் விலை உயரக்கூடும் என்கிற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதன் உண்மை தன்மை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 25 2026, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியாவில் பீர் விலை உயருமா?
Image Credit : Asianet News

இந்தியாவில் பீர் விலை உயருமா?

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழல், உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய கிழக்கு ஆசியாவை கடந்து கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்தியாவில் கடும் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் செயல்படும் உலகளாவிய பீர் தயாரிப்பு நிறுவனங்கள் விலை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், விநியோகத்தில் தடைகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எரிவாயு பற்றாக்குறை
Image Credit : Asianet News

எரிவாயு பற்றாக்குறை

இந்திய மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள கருத்துக்களின் படி, எரிவாயு பற்றாக்குறை காரணமாக கண்ணாடி பாட்டில்களின் விலை 20% அதிகரித்துள்ளது. இதனால் பீர்களின் விலையை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காகித அட்டைப் பெட்டிகளின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதுடன், லேபுள்கள், டேப்புகள் போன்ற பேக்கேஜ் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

35
கண்ணாடி பாட்டில்கள் உற்பத்தியில் கடும் சரிவு
Image Credit : Asianet News

கண்ணாடி பாட்டில்கள் உற்பத்தியில் கடும் சரிவு

உலகின் நான்காவது பெரிய இயற்கை எரிவாயு இறக்குமதியாளரான இந்தியா தனது எரிவாயு தேவையை 40% கத்தாரையே பெரிதும் நம்பியுள்ளது. ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல் கத்தாரின் ஏற்றுமதி திறனை சீர்குலைத்துள்ளது. இது இந்திய உற்பத்தியாளர்களுக்கு எரிவாயு கிடைப்பதை தடுத்துள்ளது. மேலும் கண்ணாடி உற்பத்தியில் உலைகளை இயக்குவதற்கு எரிவாயு இன்றியமையாததாக உள்ளது. 


ஃபிரோசாபாத் போன்ற இடங்களில் உள்ள கண்ணாடி உற்பத்தி மையங்களில் எரிவாயு பற்றாக்குறையால் 40% உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது மதுபான பாட்டில்கள் மட்டுமல்லாமல் பழச்சாறு மற்றும் குளிர்பான பாட்டில்களின் விநியோகத்தையும் பாதித்துள்ளது.

45
12-15% விலை உயரப்போகும் பீர்
Image Credit : Asianet News

12-15% விலை உயரப்போகும் பீர்

உற்பத்தியை செலவுகளை ஈடு செய்ய முடியாததால் பீர் விலையை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த அனுமதிக்குமாறு மாநில அரசுகளிடம், மதுபான ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும் இந்த சங்கம் தனது உறுப்பு நிறுவனங்களுக்கு விலையை உயர்த்தக் கோரி அந்தந்த மாநில அரசுகளை வலியுறுத்துமாறு அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றன. இந்திய பீர் சந்தையின் மதிப்பு 2024 இல் 7.8 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2030-க்குள் அது இரட்டிப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

55
தண்ணீர் பாட்டில் விலையும் கடும் உயர்வு
Image Credit : Asianet News

தண்ணீர் பாட்டில் விலையும் கடும் உயர்வு

மேலும் எரிவாயு மற்றும் பிளாஸ்டிக் விலைகளின் தாக்கம் இந்தியாவின் ஐந்து பில்லியன் டாலர் மதிப்பிலான தண்ணீர் பாட்டில் சந்தையை ஏற்கனவே கடுமையாக பாதித்துள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் மூடிகளின் விலை உயர்வு காரணமாக சில உற்பத்தியாளர்கள் தண்ணீர் பாட்டில்களின் விலையை 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. இந்தியாவில் மதுபான விலை உயர்வுக்கு 28 மாநிலங்களில் மூன்று இரண்டு பங்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விலைவாசி
வணிகம்
இந்தியா
ஈரான்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
100 Rupee Note : ₹100 நோட்டில் இத்தனை ரகசியங்களா? இதுவரை கவனிக்காத சுவாரஸ்ய தகவல்கள்
Recommended image2
Milk paneer: ஒரிஜினல் பன்னீர் vs போலி பன்னீர்.! இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
Recommended image3
LPG Booking New Rules: இன்னும் 5 நாட்கள்தான்.. அக்டோபர் 1 முதல் கேஸ் புக்கிங் விதி மாற்றம்! இந்த வேலையை செய்தால் மட்டுமே மானியம்!
Related Stories
Recommended image1
சொத்து வைத்திருப்பவர்களுக்கு ஷாக் நியூஸ்.! மார்ச் 31 வரை தான் டைம்.! இல்லைனா லட்சக்கணக்கில் இழக்க நேரிடும்.!
Recommended image2
ஆதார் கார்டு இருக்கா? மத்திய அரசின் ரூ.50,000 உதவி தொகை கிடைக்கும்.! எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved