இந்தியாவில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்ட ஐபோன் ஏற்றுமதி!
இந்தியாவில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஐபோன் ஏற்றுமதி புதிய சாதனையை படைத்துள்ளது..
Apple iPhone
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது கால் பதிக்க ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஐபோன் ஏற்றுமதி புதிய சாதனையை படைத்துள்ளது.. ஐபோன் ஏற்றுமதி இதுவரை இல்லாத இது சுமார் 3.8 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
Apple iPhone
அரசாங்கத்தின் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் ஆப்பிள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சீனாவில் மட்டும் முதலீடு செய்வதைத் தவிர்ப்பதற்கும், பிற பிராந்தியங்களுக்கு வணிகத்தைப் பன்முகப்படுத்துவதற்கும் 'சீனா + 1 வணிக உத்தியை' அந்நிறுவனம் பின்பற்றி வருவதால் தற்போது ஐபோன்களின் ஏற்றுமதி இந்தியாவில் அதிகரித்துள்ளது.
Apple iPhone
கடந்த நிதியாண்டிலும் ஐபோன்களின் உற்பத்தி மற்றும் விற்பனை புதிய உச்சத்தை எட்டியது. கடந்த நிதியாண்டில் அந்நிறுவனம் இந்தியாவில் சுமார் 8 பில்லியன் டாலர் விற்பனையை வலுவானதாகக் கண்டது. உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக கருதப்படும் இந்தியாவில் இந்த ஆண்டு ஐபோன் ஏற்றுமதி இந்த ஆண்டு 20 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Apple iPhone
உள்நாட்டு உற்பத்தி ஆதரவு மற்றும் வலுவான விநியோகம் ஆகியவை காரணமாக ஏற்றுமதி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 2024-2025 மத்திய பட்ஜெட்டில், மொபைல் போன்கள், பிரிண்டட் சர்க்யூட் போர்டு அசெம்பிளி (பிசிபிஏ) மற்றும் மொபைல் சார்ஜர்கள் மீதான அடிப்படை சுங்க வரியை (பிசிடி) தற்போதைய 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
Apple iPhone
கடந்த ஆறு ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தியில் மூன்று மடங்கு அதிகரிப்பு மற்றும் மொபைல் போன்களின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகரிப்புடன், இந்திய மொபைல் போன் தொழில் முதிர்ச்சியடைந்துள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
Apple iPhone
ஸ்மார்ட்போன் இறக்குமதியை நம்பியிருந்த நிலை மாறி தற்போது உள்நாட்டிலேயே 99 சதவீத சாதனங்களைத் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.