Cost Cutting | 15000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் இன்டெல் நிறுவனம்!
இன்டெல் நிறுவனம், முக்கிய செலவினக் குறைப்பு நடவடிக்கையாக சுமார் 15000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடவெடுத்துள்ளது. இதன் மூலம் 2025ம் ஆண்டில் 10 பில்லியன் டாலரை சேமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இன்டெல் நிறுவனம் ஜூன் காலாண்டில் 1.6 பில்லியன் டாலர் நஷ்டத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், இதனை சமாளிக்க வேண்டும் என்ற நோக்குடன் இன்டெல் நிறுவனம் இந்த ஆண்டு 20 பில்லியன் டாலர் செலவுகளைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இன்டெல் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பேட் கெல்சிங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்டெல் நிறுவனத்தில் 2வது காலாண்டின் நிதி செயல்திறன் ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும், எங்களது முக்கிய தயாரிப்பு மற்றும் செயல்முறையில் புதிய சாதனைகளை படைத்துள்ளோம் என காலாண்டு முடிவு அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த 2வது ஆண்டின் பாதியில் எங்களின் வர்த்தக சந்தை நிலவரம் எதிர்பார்த்ததை விட சவாலானதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இன்டெலின் AI கம்ப்யூட்டர் தயாரிப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் சரிவர பயன்படுத்தப்படாத காரணத்தால் 2வது காலாண்டின் வருவாய் சரிந்துள்ளதாக இன்டெல் நிறுவனத்தின் நிதி அதிகாரி டேவிட் ஜின்ஸ்னர் 1.6 பில்லியன் டாலர் இழப்பு குறித்து பதில் அளித்துள்ளார்.
49 பிரீமியம் அறைகள்.. ரூ.592 கோடிக்கு முகேஷ் அம்பானி வாங்கிய ஆடம்பர ஹோட்டல் பற்றி தெரியுமா?
15000 பணி நீக்கம்
இன்டெல் நிறுவனத்தில் 124,800 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள செலவின குறைப்பு, பணிநீக்கம் மூலம் சுமார் 15,000 பேர் வேலை இழக்க நேரிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இன்டெல் நிறுவனத்தின் இஸ்ரேலில் தொழிற்சாலை விரிவாக்கத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்ததுள்ளது. அதற்காக செலவிடப்பட்ட இருந்த 15 பில்லியன் டாலர் தொகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஓங்கும் போட்டியாளர்களின் கை!
இன்டெல் நிறுவனம் தனது துறை போட்டியாளர்களான Nvidia, AMD மற்றும் Qualcomm ஆகியவற்றுடன் போட்டி போட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த 3 புதிய நிறுவனங்களும் (AI) செயற்கை நுண்ணறிவு துறையில் பெரும் புரட்சியைச் செய்து அடுத்தடுத்த அப்டேடட் புராடக்டுகளை வெளியிட்டு வருகிறது. அதற்கு சந்தையில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
ரூ.7,409 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் வரவில்லை.. ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்!