49 பிரீமியம் அறைகள்.. ரூ.592 கோடிக்கு முகேஷ் அம்பானி வாங்கிய ஆடம்பர ஹோட்டல் பற்றி தெரியுமா?
இங்கிலாந்தில் உள்ள இந்த ஆடம்பர ஹோட்டலை முகேஷ் அம்பானி 2021 இல் சுமார் ரூ. 592 கோடிக்கு வாங்கினார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனரான முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வராக இருக்கிறார். ஃபோர்ப்ஸ் பட்டியலின் அம்பானி தற்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 121 பில்லியன் டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 10 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Ambani family
ஆடம்பர கார்கள், வீடுகள், மிக அரிதான கடிகாரங்கள், விலையுயர்ந்த நகைகள் என அம்பானி குடும்பத்தினர் ராஜ வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் தங்கள் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்காக முகேஷ் மற்றும் நீதா அம்பானி 5,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ததாக கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் 2021ல் முகேஷ் அம்பானி வாங்கிய ஹோட்டலான ஸ்டோக் பார்க்கில் திருமணத்திற்குப் பிந்தைய நிகழ்ச்சியை அம்பானி குடும்பம் நடத்தப் போவதாக தகவல் வெளியான நிலையில், அதை ஹோட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள இந்த ஹோட்டலை முகேஷ் அம்பானி 2021 இல் சுமார் ரூ. 592 கோடிக்கு வாங்கினார். பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள ஸ்டோக் போகஸில் அமைந்துள்ள ஸ்டோக் பார்க், 300 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகிறது.
1066 இல் கட்டப்பட்ட இந்த கட்டிடம், பின்னர் 1760 இல் ஜான் பென் என்பவரால் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. இதில் 49 சொகுசு பிரீமியம் அறைகள், 3 உணவகங்கள், மிகப்பெரிய உடற்பயிற்சி மையம், உட்புற மற்றும் வெளிப்புற நீச்சல் குளங்கள், 27-துளை கோல்ஃப் மைதானம், டென்னிஸ் மைதானங்கள் உள்ளன.
900 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்திற்கு அரச குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி சென்று வந்துள்ளனர். சுவாரஸ்யமாக, இந்த கட்டிடம் முதலாம் ராணி எலிசபெத் I இன் இல்லமாக இருந்தது. இந்த கட்டிடடம் கோல்ட்ஃபிங்கர் (1964) மற்றும் டுமாரோ நெவர் டைஸ் (1997) இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் இடம்பெற்றிருந்தது.
ஸ்டோக் பார்க் இப்போது ஆடம்பரமான ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. இவை தவிர அம்பானி குடும்பத்தினர் ரூ. 15,000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா சொகுசு வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இது உலகின் மிகவும் விலை உயர்ந்த கட்டிடமாக உள்ளது. அம்பானி குடும்பத்திற்கு துபாய் மற்றும் நியூயார்க்கிலும் ஆடம்பர வீடுகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.