MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.1,299 இருந்தா போதும்.. பஸ் டிக்கெட் விலையில் விமானத்தில் பறக்கலாம்.!

ரூ.1,299 இருந்தா போதும்.. பஸ் டிக்கெட் விலையில் விமானத்தில் பறக்கலாம்.!

இண்டிகோ நிறுவனம் "Grand Runway Fest" என்ற சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த விமான டிக்கெட் சலுகை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : Sep 16 2025, 08:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குறைந்த விலை விமான டிக்கெட்
Image Credit : Pinterest

குறைந்த விலை விமான டிக்கெட்

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo), பயணிகளுக்காக ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. Grand Runway Fest எனப்படும் இந்த ஆஃபரில், உள்நாட்டு விமான பயணத்தை வெறும் ரூ.1,299 முதல், சர்வதேச விமான பயணத்தை ரூ.4,599 முதல் பதிவு செய்யலாம். விடுமுறை திட்டமோ அல்லது தொழில் பயணமோ இருந்தாலும், இந்த சலுகை ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும்.

25
இண்டிகோ விமானம்
Image Credit : X

இண்டிகோ விமானம்

இந்த சலுகை 15 செப்டம்பர் 2025 முதல் 21 செப்டம்பர் 2025 வரை மட்டுமே கிடைக்கும். இதில், பயணிகள் 7 ஜனவரி 2026 முதல் 31 மார்ச் 2026 வரை டிக்கெட் பதிவு செய்தால் இந்த குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும். முக்கியமாக, இந்த சலுகை IndiGo நிறுவனத்தின் non-stop ஒருவழி (ஒரு வழி) விமானங்களுக்கு மட்டும் பொருந்தும்.

Related Articles

Related image1
விமான நிலையத்தில் புதிய கட்டணம் அறிவிப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்.. முழு விபரம்
Related image2
அவசரநிலையில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் செல்லலாமா? ரயில்வே ரூல்சை தெரிஞ்சுக்கோங்க
35
இண்டிகோ டிக்கெட்
Image Credit : X

இண்டிகோ டிக்கெட்

பயணிகள் IndiGo-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் goindigo.in, மொபைல் ஆப் (Android/iOS), IndiGo 6ESkai அல்லது WhatsApp (+917065145858) வழியாக இந்த சலுகையை புக்கிங் செய்யலாம். குறிப்பிட்ட உள்நாட்டு வழித்தடங்களில் எகனாமி கிளாஸ் டிக்கெட் ரூ.1,299 முதல் கிடைக்கிறது. அதே போல், Stretch/Business Class பயணத்திற்கான டிக்கெட் ரூ.9,999 முதல் தொடங்குகிறது.

45
விமான டிக்கெட் சலுகை
Image Credit : Social Media

விமான டிக்கெட் சலுகை

மேலும், IndiGo-வின் Bluechip உறுப்பினர்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில், Blu 3 உறுப்பினர்கள் 5% தள்ளுபடி, Blu 2 உறுப்பினர்கள் 8% தள்ளுபடி மற்றும் Blu 1 உறுப்பினர்கள் அதிகபட்சம் 10% தள்ளுபடியைப் பெறலாம். இதற்காக, பயணிகள் IBC10 என்ற புரமோ கோடை IndiGo வலைத்தளம் அல்லது ஆப் மூலம் பதிவு செய்யும்போது பயன்படுத்த வேண்டும்.

55
விமான டிக்கெட் புக்கிங்
Image Credit : Getty

விமான டிக்கெட் புக்கிங்

அதனால், உள்நாட்டோ, வெளிநாட்டோ குறைந்த செலவில் விமானம் பிடிக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. சில நாட்கள் மட்டுமே இந்த சலுகை அமலில் இருக்கும் என்பதால், பயணிகள் உடனே புக்கிங் செய்து பயணத்தை உறுதிசெய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இண்டிகோ விமானம்
வானூர்திப் பயணங்கள்
சலுகைகள்
தள்ளுபடி
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Related Stories
Recommended image1
விமான நிலையத்தில் புதிய கட்டணம் அறிவிப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்.. முழு விபரம்
Recommended image2
அவசரநிலையில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் செல்லலாமா? ரயில்வே ரூல்சை தெரிஞ்சுக்கோங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved