ஏறிய வேகத்தில் இறங்கியதா தங்கம் விலை.! இன்று ஒரு சவரன் விலை என்ன தெரியுமா.?
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தை மாதம் மற்றும் திருமண நாட்கள் நெருங்குவதால் நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் சவரனுக்கு ரூ.60,200 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
gold rate
தங்கத்தின் மீதான ஆர்வம்
தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் மீதான மதிப்பு தினந்தோறும் அதிகரிக்கிறது. அதன் காரணமாக தங்கத்தை அதிகளவு மக்கள் வாங்கி வருகிறார்கள். மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களே தங்கத்தை அதிகளவு விரும்பி வாங்குகிறார்கள். திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்க ஆபரணங்களை அணிய மக்கள் விரும்புவார்கள்.
gold rate
நகைக்கடைகளில் கூட்டம்
பெண் குழந்தைகளின் திருமண சேமிப்பாகவும் தங்கத்தை மக்கள் வாங்குகிறார்கள். இந்த நிலையில் தை மாதம் பிறந்து முகூர்த்த நாட்கள் வரவிருக்கும் நிலையில் தங்கத்தை வாங்க நகைக்கடைகளில் மக்கள் கூடி வருகிறார்கள். மேலும் வரும் நாட்களில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும் என்ற காரணத்தாலும் அதிகளவு மக்கள் தங்கத்தை முதலீடாக வாங்குகிறார்கள்.
தங்க நகைகளை அத்தியாவசிய தேவைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவ, கல்வி செலவிற்காக உடனடியாக விற்பனை, அடகு வைத்து பணத்தை உடனடியாக பெறுவதற்கு வாய்ப்பாக உள்ளது.
gold rate
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை
இந்த நிலையில் தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வரும் நிலையில் 2025ஆம் ஆண்டு நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. ஜனவரி 18ஆம் தேதி தங்கத்தின் விலையானது சற்று குறைந்த நிலையில் அடுத்த நாளே அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,525க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன்படி ஒரு சவரனுக்கு ரூ.600 உயர்ந்து 60,200 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதனால் புதிதாக நகை வாங்க திட்டமிட்டிருந்த நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
gold rate
இன்று தங்கம் விலை
தங்கத்தின் விலையானது வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில் இன்று தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.