வருமான வரி தாக்கல்: யாருக்கு வரி இல்லை? எந்த ஆவணங்கள் கட்டாயம்!
புதிய வருமான வரி விதிப்பின்படி, 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி இல்லை. 12 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, வருமான அடுக்குகளுக்கு ஏற்ப 5% முதல் 30% வரை வரி விதிக்கப்படும். புதிய முறையில் 80C, 80D போன்ற வரி விலக்குகள் இல்லை.

இவ்ளோ சம்பளமா அப்போ வரி இல்லை!
தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது.
5 சதவீதம் வரி யாருக்கு?
நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது உங்களின் சம்பளத்தின் முதல் 0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை. ஆனால் 4-8 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
யாருக்கு 15 சதவீதம் வரி?
அதேபோல் 8-12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. 12-16 லட்சம் ரூபாய்க்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
இவர்களுக்கெல்லாம் 30 சதவீதம் வரி
16-20 லட்சம் ரூபாய்க்கு 20 சதவீதம் வரியும், 20-24 லட்சம் ரூபாய்க்கு 25 சதவீதம் வரியும் 24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்
புதிய வருமான வரி வரி ரிபேட்
புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்குதனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இது குறித்து அறிந்துகொள்ள வேண்டியது கட்டாயம். அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது.
வரி விலக்கு பெற முயாதவர்கள்
நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது மேற்கண்ட வரி விதிக்கப்படும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது.
தேவையான முக்கிய ஆவணங்கள்
Form 16 (Part A & B) – உங்கள் நிறுவனத்திலிருந்து
ஊதிய ரசீதுகள் – Form 16 மற்றும் e-filing ப்ரீ-பில்ட் டேட்டா
சேமிப்பு, FD, RD வட்டிச் சான்றிதழ்கள்
வீட்டு கடன் வட்டி சான்றிதழ் (பழைய முறையில் டாக்ஸ் தாக்கல் செய்தால் தேவையாகும்)
பங்கு மற்றும் சொத்து விற்பனை விவரங்கள் – ப்ரோக்கர் நிறுவனத்திலிருந்து P&L அறிக்கை
இந்த ஆவணங்களும் கட்டாயம் தேவை
2024 பஜட்டில் நடந்த மாற்றங்கள் காரணமாக, ஜூலை 23, 2024-க்கு முந்தைய மற்றும் பின்னதைய விற்பனையை தனித்தனியாக குறிப்பிட வேண்டும், வீட்டு சொத்து வருமானம், சொத்தின் விவரங்கள், வாடகை ரசீது, நகராட்சி வரி ரசீது, வீட்டு கடன் வட்டி சான்றிதழ் ஆகியவையும் தேவைப்படும்
இவற்றையும் ரெடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்
வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வருமானம், வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்களுக்கு ஆதார ஆவணங்கள், தொழில் / தொழில்முனைவர்களின் வருமானம், வங்கி கணக்கு அறிக்கைகள் ரசீதுகள், பில் புக்குகள், TDS சான்றிதழ்கள் ஆகியற்றின் விவரங்களும் வருமான வரி தாக்கல் செய்வதற்கு கட்டாயம் தேவை
விவசாய வருமானத்தை குறிப்பிடவும்
வேளாண் வருமானம், விவசாய வருமானம் இருந்தால் அதற்கான ஆதாரங்கள், முதலீட்டுச் சான்றுகள் (பழைய முறை வரி விலக்கு), வாழ்க்கை காப்பீட்டு ரசீதுகள், ELSS, PF, PPF, NPS முதலீட்டு விவரங்கள்மருத்துவ காப்பீட்டு, கல்விக் கடன், வீட்டு கடன், பள்ளி கட்டணம், தானங்கள், அடையாள மற்றும் வங்கி விவரங்கள், PAN & Aadhaar இணைப்பு, வங்கி கணக்கின் விவரங்களை (ரீஃபண்ட் பெற) சரியாக வைத்திருக்கும் போது எளிதாக வருமான வரி தாக்கல் செய்யலாம்