- Home
- Business
- Fake ₹200 Note: ரூ.200 நோட்டு வாங்குறீங்களா? ஒரே நிமிடத்தில் உண்மையா, போலியா கண்டுபிடிக்கலாம்!
Fake ₹200 Note: ரூ.200 நோட்டு வாங்குறீங்களா? ஒரே நிமிடத்தில் உண்மையா, போலியா கண்டுபிடிக்கலாம்!
Fake ₹200 Note: நாம கடைக்குப் போகும்போது சில்லறை வாங்கும்போது, கையில் வரும் நோட்டை பெரும்பாலும் சரிபார்ப்பதில்லை. அது நல்ல நோட்டுதான் என்று நம்பிவிடுகிறோம். இப்படி செக் செய்யாமல் இருப்பதால் பலர் ஏமாந்து போகிறார்கள்.

200 ரூபாய் நோட்டு
நம்ம கடைக்குப் போகும்போது சில்லறை வாங்கும்போது, கையில் வரும் நோட்டை பெரும்பாலும் சரிபார்ப்பதில்லை. அது நல்ல நோட்டுதான் என்று நம்பிவிடுகிறோம். ஆனால், இப்படி செக் செய்யாமல் இருப்பதால் பலர் ஏமாந்து போகிறார்கள். இந்த மாதிரி ஏமாறாமல் இருக்க, அசல் நோட்டை கண்டுபிடிக்க 7 வழிகளை ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
போலி 200 ரூபாய் நோட்டு
எல்லா இந்திய ரூபாய் நோட்டுகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, ரிசர்வ் வங்கி அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இதில், ஒரு அசல் 200 ரூபாய் நோட்டை அடையாளம் காண 7 வழிகளும் அடங்கும். இது கள்ள நோட்டுகளால் ஏமாறுவதைத் தவிர்க்க உங்களுக்கு உதவும்.
2005-க்கு முன் அச்சிடப்பட்ட ரூ.10, 20, 50, 100 நோட்டுகள் செல்லாதா? ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு
200 ரூபாய் நோட்டு அடையாளம்
200 ரூபாய் நோட்டை எப்படி அடையாளம் காண்பது? நோட்டின் கீழ் இடது பக்கத்தில், '200' என்று எழுதப்பட்ட ஒரு பகுதி இருக்கும். நோட்டை வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தால் இது தெளிவாகத் தெரியும். 200 ரூபாய் நோட்டில், தேவநாகரி எழுத்தில் '२००' என்றும் எழுதப்பட்டிருக்கும். இந்த நோட்டின் முன்பக்கத்தின் நடுவில் மகாத்மா காந்தியின் படம் உள்ளது.
200 ரூபாய் நோட்டு பாதுகாப்பு அம்சங்கள்
வலதுபுறம், ஆளுநரின் கையெழுத்து, உறுதிமொழி மற்றும் ரிசர்வ் வங்கி லோகோ ஆகியவை இடம்பெற்றிருக்கும். நோட்டின் மேல் இடதுபுறம், எண்கள் சிறியதிலிருந்து பெரியதாக ஏறுவரிசையில் அச்சிடப்பட்டிருக்கும். அதேபோல, கீழ் வலதுபுறத்திலும் எண்கள் ஏறுவரிசையில் இருக்கும். கீழ் வலதுபுறத்தில் அசோகத் தூணின் சின்னம் அச்சிடப்பட்டிருக்கும்.
ரிசர்வ் வங்கி நோட்டு
எனவே, இனி எப்போதாவது 200 ரூபாய் நோட்டைப் பார்க்கும்போது, அது போலியானதாக இருக்குமோ என்ற சின்ன சந்தேகம் வந்தாலும், இந்த ஏழு முக்கியமான அடையாளங்களை கவனமாகச் சரிபார்க்கவும். இது எந்தவிதமான மோசடியிலிருந்தும் உங்களைக் காப்பாற்றும்.
சம்பளம் குறைவாக இருந்தாலும் ITR தாக்கல் செய்ய வேண்டுமா? பலருக்கு தெரியாத முக்கிய விதிகள்!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

