MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • PF Claim Rejection : பிஎஃப் பணம் ரிஜெக்ட் ஆகுதா? இந்த சின்ன தப்பை 2 நிமிஷத்துல சரி பண்ணுங்க.!

PF Claim Rejection : பிஎஃப் பணம் ரிஜெக்ட் ஆகுதா? இந்த சின்ன தப்பை 2 நிமிஷத்துல சரி பண்ணுங்க.!

How to Change KYC Details in UAN Portal : பிஎஃப் பணத்தை எடுக்கும்போது உங்கள் விண்ணப்பம் அடிக்கடி நிராகரிக்கப்படுகிறதா? கவலை வேண்டாம். இந்த பிரச்சனைக்கு EPFO தீர்வை வழங்கியுள்ளது. வீட்டில் இருந்தபடியே எப்படி சரி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 29 2026, 02:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
How to Change KYC Details in UAN Portal
Image Credit : Asianet News

How to Change KYC Details in UAN Portal

பெரும்பாலும் பிஎஃப் கிளைம் ரிஜெக்ட் ஆவதற்கு ஒரே ஒரு முக்கிய காரணம் தான் இருக்கிறது. அது, டேட்டா பொருந்தாமல் இருப்பது (Data Mismatch). அதாவது, உங்கள் பிஎஃப் கணக்கு பதிவில் உள்ள பெயர், பிறந்த தேதி அல்லது பாலினம் போன்ற தகவல்கள், உங்கள் ஆதார் கார்டில் உள்ள தகவல்களுடன் பொருந்தாமல் இருப்பதுதான். இப்போது EPFO உங்கள் விவரங்களை நேரடியாக ஆதார் டேட்டாவுடன் சரிபார்ப்பதால், ஒரு சிறிய எழுத்துப்பிழை கூட உங்கள் கிளைமை நிராகரிக்கச் செய்துவிடும். ஆனால், இதை சரிசெய்ய இனி நீங்கள் அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை.
Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
ஆதார் விவரங்களுடன் சரிபார்ப்பு
Image Credit : Asianet News

ஆதார் விவரங்களுடன் சரிபார்ப்பு

முன்பெல்லாம் பிஎஃப் கணக்கில் ஒரு சின்ன தவற்றைத் திருத்த பல மாதங்கள் அலுவலகங்களுக்கு நடையாய் நடக்க வேண்டியிருந்தது. ஆனால், இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. இந்த புதிய ஆன்லைன் சிஸ்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நீங்கள் உங்கள் விவரங்களை அப்டேட் செய்தவுடன், சிஸ்டம் அதை நேரடியாக ஆதார் (UIDAI) டேட்டாபேஸுடன் சரிபார்க்கிறது. இதனால் மோசடிக்கு வாய்ப்பு இல்லாமல் போவதோடு, உங்கள் வேலையும் பல மடங்கு வேகமாக முடிகிறது.

Related Articles

Related image1
PF கணக்கு வச்சிருக்கவங்களுக்கு டபுள் ஜாக்பாட்.! இனி மாதம் ரூ.6,000 வரப்போகுது.! ஏப்ரல் 1 முதல் எல்லாமே மாறப்போகுது.!
Related image2
PF கணக்கு வச்சிருக்கீங்களா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.! வரப்போகும் 5 முக்கிய மாற்றங்கள்.! சம்பவம் செய்ய காத்திருக்கும் EPFO.!
35
PF கணக்கை வீட்டில் இருந்தபடியே அப்டேட் செய்வது எப்படி?
Image Credit : Asianet News

PF கணக்கை வீட்டில் இருந்தபடியே அப்டேட் செய்வது எப்படி?

உங்கள் விவரங்களை வீட்டில் இருந்தபடியே சரிசெய்ய இந்த 5 ஸ்டெப்ஸை ஃபாலோ பண்ணுங்க: 

  1. முதலில், EPFO-வின் UAN போர்ட்டலுக்குச் சென்று உங்கள் பாஸ்வேர்டுடன் லாகின் செய்யுங்கள். 
  2. மேலே உள்ள மெனுவில் 'Manage' என்பதைக் கிளிக் செய்து, 'Modify Basic Details' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
  3. இப்போது திறக்கும் பக்கத்தில், உங்கள் ஆதார் கார்டில் உள்ளபடியே தகவல்களை உள்ளிடவும். பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகியவற்றை ஆதார் கார்டில் இருப்பது போலவே டைப் செய்யவும். 
  4. விவரங்களை நிரப்பிய பிறகு 'Update' பட்டனை அழுத்தவும். இப்போது உங்கள் கோரிக்கை, ஒப்புதலுக்காக உங்கள் நிறுவனத்திற்கு (Employer) அனுப்பப்படும். 

உங்கள் நிறுவனத்தின் HR அல்லது மேலதிகாரியிடம் இந்த ஆன்லைன் கோரிக்கை பற்றி தெரிவியுங்கள். அவர்கள் ஒப்புதல் அளித்தவுடன், உங்கள் விவரங்கள் அப்டேட் ஆகிவிடும்.

45
வங்கி விவரங்களை நீங்களே நேரடியாக அப்டேட் செய்யலாம்
Image Credit : Asianet News

வங்கி விவரங்களை நீங்களே நேரடியாக அப்டேட் செய்யலாம்

இந்த அப்டேட்டின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், உங்கள் வங்கி கணக்கு எண் அல்லது IFSC கோடை மாற்ற, உங்கள் நிறுவனத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கத் தேவையில்லை. வங்கி விவரங்களை நீங்களே நேரடியாக அப்டேட் செய்யலாம். இது பிஎஃப் பணம் எடுக்கும் செயல்முறையை இன்னும் எளிதாக்குகிறது.
55
சில முக்கியமான விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்
Image Credit : Asianet News

சில முக்கியமான விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்

சில முக்கியமான விஷயங்களை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்:

  • உங்கள் ஆதார் கார்டு, உங்கள் PAN கார்டுடன் எப்போதும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 
  • வங்கி விவரங்களை உள்ளிடும்போது, பாஸ்புக்கைப் பார்த்து சரியான IFSC கோடை நிரப்பவும். 
  • முழுமையான KYC இல்லாமல், EPFO ஒரு ரூபாய் கூட எடுக்க உங்களை அனுமதிக்காது. எனவே, இன்றே உங்கள் KYC-ஐ முடித்துவிடுங்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பி.எஃப் இருப்பு (PF Iruppu)
வருங்கால வைப்பு நிதி திரும்பப் பெறுதல்
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு)

Latest Videos
Recommended Stories
Recommended image1
RBI: ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு இருந்தால் ரூ.10,000 அபராதம்? ஆர்பிஐ ரூல்ஸ் சொல்வது என்ன?
Recommended image2
Irctc Rules: ரயிலை தவறவிட்டால் அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் பயணிக்கலாமா? ரீஃபண்ட் கிடைக்குமா?
Recommended image3
Atal Pension: அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இனி மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்? மத்திய அரசு தீவிர பரிசீலனை
Related Stories
Recommended image1
PF கணக்கு வச்சிருக்கவங்களுக்கு டபுள் ஜாக்பாட்.! இனி மாதம் ரூ.6,000 வரப்போகுது.! ஏப்ரல் 1 முதல் எல்லாமே மாறப்போகுது.!
Recommended image2
PF கணக்கு வச்சிருக்கீங்களா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.! வரப்போகும் 5 முக்கிய மாற்றங்கள்.! சம்பவம் செய்ய காத்திருக்கும் EPFO.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved