வீட்டில் எவ்வளவு வெள்ளி வைத்திருக்கலாம்.? ஆர்பிஐ ரூல்ஸ்.. மீறினால் அபராதம்
வீட்டில் எவ்வளவு வெள்ளி வைத்திருக்கலாம்? ஆர்பிஐ மற்றும் வருமான வரித்துறை விதிகள் என்ன? விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பும் உண்டு.

வெள்ளி லிமிட் எவ்வளவு?
இந்தியாவில் வெள்ளி என்பது நகைகள், பாத்திரங்கள், முதலீடு என பல வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. சமீப காலங்களில் தங்கத்தை விட வெள்ளி சிறந்த முதலீட்டு நிறுவனமாக மாறியுள்ளது. இந்த வருடம் மட்டும் 80% வரை லாபம் கொடுத்துள்ளது. இதனால் மக்கள் வெள்ளி வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் வீட்டில் வெள்ளி சேமிப்பில் ஏதேனும் வரி விதிகள் அல்லது வரம்புகள் (லிமிட்) உள்ளதா என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.
வருமான வரி
வருமான வரி சட்டப்படி (வருமான வரி சட்டம் 1961), நீங்கள் எவ்வளவு வெள்ளி வேண்டுமானாலும் வீட்டில் வைத்திருக்கலாம். அது வாங்கியதோ அல்லது மரபாக வந்ததோ எதுவாக இருக்கும் இருந்தாலும் பரவாயில்லை. தங்கத்திற்கு உள்ளதைப் போல வெள்ளிக்கு எந்த அளவு கட்டுப்பாடு இல்லை. அதாவது, ஆர்பிஐ (RBI) அல்லது வருமான வரித்துறை எந்த ஒரு சட்டத்திலும் வீட்டில் வைத்திருக்கக்கூடிய வெள்ளி அளவுக்கு வரம்பு விதிக்கப்படவில்லை.
வெள்ளி முதலீடு
ஆனால் முக்கியமானது, நீங்கள் வெள்ளி வாங்கும் போது அவசியமாக ரசீது அல்லது பில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், எதிர்காலத்தில் வருமான வரித்துறை ஆய்வு செய்தால், அந்த வெள்ளி சட்டப்படி வாங்கப்பட்டது என்பதற்கு ஆதாரம் காட்ட முடியாவிட்டால், அது அறிவிக்காத சொந்தமாக கருதப்படும் வாய்ப்பு உள்ளது.
வெள்ளி அபராதம்
நீங்கள் வெள்ளியை நகையாக அல்லாமல் முதலீடாகக் கருதினால், விற்பனை செய்தபோது வரி விதிகள் பொருந்தும். 24 மாதத்திற்குள் விற்றால், அது Short Term Capital Gains (STCG) ஆகும்; உங்கள் வருமான வரி விகிதத்திற்கேற்ப வரி செலுத்த வேண்டும். 24 மாதத்திற்குப் பிறகு விற்றால், அது Long Term Capital Gains (LTCG) ஆகும். ஜூலை 23, 2024க்குப் பிறகு வாங்கிய வெள்ளிக்கு 12.5% வரி விதிக்கப்படும்.
ஆர்பிஐ விதிகள்
indexation சலுகை இல்லை. அதற்கு முன் வாங்கிய வெள்ளிக்கு 20% வரி மற்றும் indexation சலுகை உண்டு. ஆகவே, வெள்ளி நகை, நாணயம் அல்லது ETF, Mutual Fund ஆகிய எந்த வடிவிலும் முதலீடு செய்தாலும், அதன் சட்டபூர்வ ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும். வெள்ளி சேமிப்பில் வரம்பில்லை, ஆனால் பில் இருந்தால்தான் பாதுகாப்பு உண்டு.