MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வங்கி சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்துகொள்ளலாம்?

வங்கி சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்துகொள்ளலாம்?

பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதைத் தவிர, வட்டியும் கிடைக்கிறது. ஆனால், சேமித்த மொத்த பணத்தையும் சேமிப்புக் கணக்கில் போடாமல், வெவ்வேறு முதலீடுகளைச் செய்வது வருமானத்தை அதிகரிக்கும் வழியாகும்.

2 Min read
Author : SG Balan
Published : Sep 25 2024, 11:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Savings Account Limit

Savings Account Limit

சேமிப்புக் கணக்கு என்பது பல சேவைகளைப் பெறுவதற்கும், அன்றாடத் தேவைகளுக்காக எடுத்து செலவு செய்யவும் முக்கியமாகப் பயன்படுகிறது. பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதைத் தவிர, வட்டியும் கிடைக்கிறது. ஆனால், சேமித்த மொத்த பணத்தையும் சேமிப்புக் கணக்கில் போடாமல், வெவ்வேறு முதலீடுகளைச் செய்வது வருமானத்தை அதிகரிக்கும் வழியாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Savings Account Deposit

Savings Account Deposit

சேமிப்பு மற்றும் செலவினங்களுக்கு இடையே சரியான சமநிலையைப் பேணுவதன் மூலம் எதிர்காலத்தில் பணச் சிக்கல் ஏற்படுத்துவதைத் தவிர்க்கலாம். அந்த வகையில் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது மிகவும் முக்கியம். இதை தனிப்பட்ட வாழ்க்கைச் சூழல், நிதி சார்ந்த இலக்குகள் மற்றும் பொருளாதார நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்யலாம்.

38
Emergency Fund

Emergency Fund

சேமிப்புக் கணக்கின் முதன்மை நோக்கங்களில் ஒன்று அவசரகால நிதியை நிறுவுவதாகும். உடனடியாகக் கிடைக்கும் வகையில் மூன்று முதல் ஆறு மாத செலவுகளுக்குப் போதுமான அளவு நிதியை சேமிப்புக் கணக்கில் வைத்துக்கொள்ளலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மருத்துவச் செலவுகள், வேலை இழப்பு அல்லது வீட்டில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க இந்தத் தொகை பயன்படும்.

48
Short-term plans

Short-term plans

குறுகிய கால செலவுத் திட்டங்களை முன்னிட்டு சேமிப்புக் கணக்கில் பணம் வைத்திருக்கலாம். அதாவது, விடுமுறை நாள் பயணச் செலவு, வீட்டுக் கடனுக்கான தவணை, பெரிய பொருள் ஒன்றை வாங்குவதல் போன்ற காரணங்களுக்காக  சேமிப்புக் கணக்கில் போதுமான அளவு பணத்தை வைத்திருக்கலாம். இதுபோன்ற செலவுகளுக்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பதைக் கணித்து அந்த அளவுக்கு மட்டும் சேமிப்புக் கணக்கில் இருப்பு வைத்துக்கொள்ளலாம்.

58
Expenses

Expenses

சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதை மாதாந்திர செலவுகள் மற்றும் பணப்புழக்கத்தைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். வீட்டு வாடகை, மளிகை உள்ளிட்ட பொருட்கள் வாங்குவது, காப்பீட்டு பிரீமியம் போன்ற அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டும் அளவுக்கு சேமிப்புக் கணக்கில் ஒரு தொகையை வைத்திருப்பது சரியாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் வழக்கமான இந்தச் செலவுகளுக்குப் பணம் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

68
Investments

Investments

சேமிப்புக் கணக்கு பாதுகாப்பு மற்றும் எளிமையாக அணுகும் வசதியை வழங்குகிறது. ஆனால், அதே வேளையில், அதிகப்படியான நிதியை அதில் வைத்திருப்பதற்கு வலுவான காரணம் இருக்க வேண்டும். சேமிப்புக் கணக்கில் கிடைக்கும் வட்டியானது பிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்டு உள்ளிட்ட பிற முதலீடுகளில் கிடைக்கும் வருமானத்தை விட குறைவாகவே இருக்கும். நிதி பாதுகாப்பு மற்றும் வருமாய் வாய்ப்புகளை சமநிலையில் நிர்வகிக்கும் வகையில் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

78
Inflation

Inflation

பணவீக்கம் காரணமாக காலப்போக்கில் பணத்தின் மதிப்பு குறைகிறது. சேமிப்புக் கணக்கில் பெறப்படும் வட்டி பணவீக்கத்துடன் ஒத்துப்போகாமல் இருக்கலாம். இது உங்கள் சேமிப்பின் உண்மையான மதிப்பு குறைவதற்கு வழிவகுக்கும். இதற்காகத்தான் குறைந்த ரிஸ்க் உள்ள முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற அதிக வருமானத்திற்கான சாத்தியத்தை வழங்கும் வழிகளில் முதலீடு செய்ய வேண்டும்.

88
For loans

For loans

சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் போது, ​​வருமானம், செலவுகள், கடன்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை மதிப்பிட வேண்டியது அவசியம். அதிக வட்டியில் வாங்கிய கடன்கள் இருந்தால், சேமிப்புக் கணக்கில் கணிசமான தொகையை ஒதுக்கி கடன்களைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை கொடுக்கலாம். கடனில் இருந்து விடுபட்டவுடன், தொடர்ந்து அந்த நிதியை அதிக லாபம் அளிக்கும் சாத்தியமுள்ள திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
சேமிப்புக் கணக்கு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image2
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Recommended image3
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved