Home Loan: உங்கள் சம்பளத்துக்கு எவ்வளவு கிடைக்கும் தெரியுமா.?!
சொந்த வீடு வாங்க நினைக்கும் நடுத்தர மக்களுக்கு வீட்டுக் கடன் ஒரு கைகொடுக்கும் திட்டம். மாத சம்பளத்தின் அடிப்படையில் வீட்டுக் கடன் கணக்கிடப்பட்டு, குறைந்த சம்பளம் உள்ளவர்களுக்கும் வீடு வாங்க வழிவகுக்கிறது.

கனவை நனவாக்கும் வீட்டுக்கடன்
சொந்தவீடு கட்டுவதற்கு நினைக்கும் நடுத்தர அடித்தட்டு மக்களுக்கு கை கொடுத்து உதவுவது வீட்டு கடன் திட்டமாகும். இல்லம் என்பது மனித வாழ்க்கையின் அடிப்படை தேவைகளில் ஒன்று. பலர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை வீட்டை வாங்கவேண்டும் என்ற கனவுடன் வாழ்க்கையைத் தொடர்ந்து செலுத்துகிறார்கள். ஆனால் வீடு வாங்குவதற்கான செலவுகள் இன்றைய சூழ்நிலையில் மிகவும் உயர்ந்துள்ளன. இதனால், வீட்டுக் கடன் (Home Loan) என்பது பெரும்பாலான மக்களுக்கு ஒரு முக்கிய வசதியாக இருக்கிறது. மாத சம்பளம் வாங்கும் ஒருவருக்கு அவர்களின் சம்பளத்தை அடிப்படையாக கொண்டு வீட்டுக்கடன் வழங்கப்படுகிறது.
வங்கிகள் இவற்றையெல்லாம் பார்க்கும்
உங்கள் மாத வருமானம் (Take home salary)
உங்கள் முந்தைய கடன் நிலை மற்றும் தவணை கட்டுப்பாடுகள்
உங்கள் கடன் மதிப்பீடு (CIBIL Score)
உங்கள் வேலை நிலைத்தன்மை
வாங்க விரும்பும் வீட்டு மதிப்பு
வட்டி விகிதம் மற்றும் கடன் காலம்
இவை அனைத்தும் உங்கள் கடன் தகுதியை (Loan Eligibility) தீர்மானிக்கின்றன.
மாத சம்பளத்தின் அடிப்படையில் ஹோம் லோன் கணக்கீடு எப்படி?
பொதுவாக வங்கிகள் உங்கள் மாத வருமானத்தின் 40% முதல் 50% வரை ஹோம் லோன் தவணைக்காக ஒதுக்கும். உங்கள் மாத சம்பளத்தில் பாதி அளவு தவணையை (EMI) கட்ட முடியும் என்ற அடிப்படையில் ஹோம் லோன் தொகையை கணக்கிடுகிறார்கள். உங்கள் மாத சம்பளம் ₹30,000 என்றால், வங்கிகள் இதன் 50% வரை மாத தவணை செலுத்த இயலும் என் கருதுகின்றன. இதனால, ₹15,000 மாத தவணை செலுத்தும் திறனை வைத்துக்கொண்டு, 20 வருடங்களுக்கு 8.5% வட்டியில் வங்கிகள் உங்கள் ஹோம் லோன் தொகையை கணக்கிடும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையில், ₹15,000 மாத தவணைக்கு, உங்கள் ஹோம் லோன் சுமார் ₹17 லட்சம் வரை இருக்கக்கூடும்.
மாத சம்பளத்தின்படி கிடைக்கும் ஹோம் லோன் தொகை
வங்கி வழங்கும் சராசரி வட்டி விகிதம் (8.5%) மற்றும் 20 வருட கடன் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டால், மாத சம்பளம் ₹10,000 என்றால், மாத தவணைக்கு அனுமதிக்கப்படும் அளவு சுமார் ₹4,000 மட்டுமே. இந்த நிலைக்கு ஏற்ப ஹோம் லோன் சுமார் ₹4.5 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும். அதேபோல் மாத சம்பளம் ₹15,000 என்றால், சுமார் ₹6,000 வரை தவணை கட்ட முடியும். இதற்கேற்ப ஹோம் லோன் சுமார் ₹7 லட்சம் வரை வழங்கப்படும்.
மாத சம்பளம் ₹25,000 என்றால், மாத தவணை ₹12,500 வரை கட்ட முடியும். இதற்கேற்ப ஹோம் லோன் சுமார் ₹14 லட்சம் வரை கிடைக்கும்.மாத சம்பளம் ₹35,000 என்றால், ஹோம் லோன் சுமார் ₹20 லட்சம் வரை கிடைக்கும். மாத சம்பளம் ₹50,000 என்றால், ஹோம் லோன் சுமார் ₹28.5 லட்சம் வரை கிடைக்கும்.மாத சம்பளம் ₹75,000 என்றால், ஹோம் லோன் சுமார் ₹43 லட்சம் வரை கிடைக்கும். மாத சம்பளம் ₹1,00,000 என்றால், ஹோம் லோன் சுமார் ₹57 லட்சம் வரை கிடைக்கும். இவை அனைத்தும் ஒரு சராசரி நிலை. வட்டி விகிதம் குறைந்திருந்தால் கூடுதல் தொகை கிடைக்கும்; அதிகமாக இருந்தால் குறைவாகக் கிடைக்கும்.
குறைந்த சம்பளத்திற்கு ஹோம் லோன் கிடைக்குமா?
மாதம் ₹10,000 சம்பளமாக இருந்தாலும், உங்கள் வருமானத்தை நிரூபிக்க வங்கி சரியான ஆவணங்களை கேட்கும். தவணை அளவு குறைவாக இருக்கும் என்பதால், ஹோம் லோன் தொகையும் குறைவாக இருக்கும். ஆனால் 5-6 லட்சம் வரை வீடு வாங்க விரும்பும் சாமானிய குடும்பங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
வருமானம் நிரூபிக்க பணி சான்றுகள், வங்கிக் கணக்கு பட்டியல், Form 16 போன்றவை தயார் வைத்திருக்க வேண்டும்.உங்களது CIBIL ஸ்கோர் 750க்கும் மேல் இருக்க வேண்டும்.உங்கள் வீடு குறைந்த பட்ஜெட்டில் இருப்பது உறுதி செய்ய வேண்டும்.உங்கள் கடன் தகுதியை உயர்த்த என்ன செய்யலாம்? என்றால் உங்கள் வருமானத்தை உயர்த்துங்கள் – கூடுதல் வேலை, கூடுதல் வருமானம் வழியாக. மேலும் முந்தைய கடன்கள் இருந்தால் அவற்றை அடைத்துவிடுங்கள். Co-applicant சேருங்கள் (கணவர்/மனைவி/பெற்றோர்) – அவர்களின் வருமானமும் சேர்ந்து கணக்கிடப்படும். முதற்கட்டமாக நீங்கள் செலுத்தும் தொகையை (Down Payment) அதிகமாக்குங்கள். உங்கள் CIBIL ஸ்கோரை மேம்படுத்துங்கள் – தவறான தவணைகள் தவிர்த்து நல்ல கடன் வரலாறு வைத்திருங்கள்.
சந்தோஷம் விளையாடும் வீடு
ஒரு வீட்டை வாங்கும் கனவு, உங்கள் சம்பளத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒன்று அல்ல. சரியான திட்டமிடல், நிதி ஒழுங்கு, வருமான நிரூபண ஆவணங்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய வங்கி தேர்வு மூலம் நீங்கள் எந்த அளவுக்கும் ஹோம் லோன் பெற முடியும். மிக குறைந்த சம்பளத்தில் இருந்தாலும், சில வருடங்கள் திட்டமிட்டு நிதியையும், CIBIL ஸ்கோரையும் மேம்படுத்தினால், உங்கள் கனவுக்கான வீட்டை நிஜமாக்க முடியும்.“சம்பளம் குறைவாக இருந்தாலும், திட்டமிட்டால் வீடு வாங்க முடியும்!”உங்களது நிதி சிந்தனையைத் திட்டமிடுங்கள் – உங்கள் கனவுக்கு அடித்தளமாக அமையும்.