வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? என்ன செய்தால் ரெய்டு வரும் தெரியுமா?
வருமான வரி விதிகளின் கீழ் வீட்டில் பணம் வைத்திருப்பதற்கான வரம்பை அறிந்து கொள்ளுங்கள். ஆதாரம் காட்ட தவறினால் நடவடிக்கை எடுக்கப்படலாம். பண பரிவர்த்தனைகள், வங்கியில் இருந்து பணம் எடுத்தல் மற்றும் TDS விதிகள் பற்றிய விரிவான தகவல்கள்.

வீட்டில் பணம் வைத்திருப்பது குற்றமல்ல
வீட்டில் பணம் வைத்திருப்பது குற்றமல்ல, ஆனால் வரி விதிகளின் கேள்வி வரும்போது, சிறிய அலட்சியம் கூட உங்களை பெரிய சிக்கலில் சிக்க வைக்கலாம்.
IT Raid
வரம்பு இல்லை, ஆனால் ஆதாரம் அவசியம்
உங்கள் வீட்டில் 10 லட்சமோ அல்லது 1 கோடி ரூபாயோ இருந்தாலும், அதற்கான ஆதாரத்தை நீங்கள் காட்ட முடியாவிட்டால், வருமான வரித்துறை அதை 'அறிவிக்கப்படாத வருமானம்' என்று கருதலாம். அதாவது வீட்டில் உள்ள பணம் எந்த வகையில் சம்பாதிக்கப்பட்டது, அதற்கு முறையாக வரி கட்டப்பட்டுள்ளதா, கணக்கு காட்டப்பட்டுள்ளதா உள்ளிட்ட விவரங்களை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
Income Tax Raid
வருமான வரி சோதனையில் பணம் கிடைத்தால் என்ன ஆகும்?
அடிக்கடி செய்திகளில், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடக்கும்போது, அதிக பணம் பிடிபடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதற்கு கணக்கு இல்லையென்றால், பணம் பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்பட்டு கைது வரை நடக்கலாம்.
Bank Deposit
ரூ.50,000க்கு மேல் பணம் டெபாசிட் அல்லது எடுக்க என்ன விதி?
வங்கியில் ஒரே நேரத்தில் ரூ.50,000க்கு மேல் பணம் டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ பான் எண் கொடுப்பது கட்டாயம். இதனை நீங்கள் சாதாரணமாக வங்கிகளில் பணம் செலுத்தச் சென்றாலே அறிந்திருக்க முடியும். ரூ.49000 வரை டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு எந்தவித தடையும் கிடையாது. ஆனால் ரூ.50,000 டெபாசிட் செய்யப்படும் பட்சத்தில் பான் (Pan Card) எண் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
What is TDS
பிரிவு 194N - அதிக பணம் எடுத்தால் TDS கழிக்கப்படும்
கடந்த 3 வருடங்களாக நீங்கள் ITR தாக்கல் செய்யவில்லை என்றால், ₹20 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் 2% TDS, ₹1 கோடிக்கு மேல் எடுத்தால் 5% TDS செலுத்த வேண்டும். ITR தாக்கல் செய்பவர்களுக்கு வரம்பு ₹1 கோடி.
அறிவிக்கப்படாத பணம் என்றால் பிரச்சனையின் ஆரம்பம்
வருமான வரித்துறை ஆதாரமில்லாத பணத்தை அறிவிக்கப்படாத வருமானமாகக் கருதுகிறது. இதற்கு அபராதம், வரி மற்றும் TDS விதிக்கப்படலாம். விசாரணை வேறு.
TDS Deduction
பணம் வைக்க வேண்டுமா? இந்த 3 விஷயங்களை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்
எப்போதும் ஆதாரத்திற்கான சான்றை வைத்திருங்கள் (சம்பளம், வணிகம், சொத்து விற்பனை போன்றவை).
வங்கி அறிக்கை மற்றும் பரிவர்த்தனை விவரங்களை சேமிக்கவும்.
ITR ரிட்டர்னை சரியான நேரத்தில் தாக்கல் செய்யுங்கள்.