- Home
- Business
- Gold Rate Today (September 26): மீண்டும் உச்சத்தில் தங்கம்.! என்ன தான் செய்ய வேண்டும் அடித்தட்டு மக்கள்.?!
Gold Rate Today (September 26): மீண்டும் உச்சத்தில் தங்கம்.! என்ன தான் செய்ய வேண்டும் அடித்தட்டு மக்கள்.?!
கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த ஆபரணத்தங்கத்தின் விலை, கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் மீது ஆர்வம் காட்டுவதும், அமெரிக்க பொருளாதார சிக்கல்களும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆபரணத்தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றம்.!
கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த ஆபரணத்தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 10 ஆயிரத்து 550 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 320 ரூபாய் அதிகரித்து 84,400 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 156 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ பார்வெள்ளி ஒரு லட்சத்து 53 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
திட்டமிட்டு வாங்குவது அவசியம்
அதேபோல் மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆபரணத்தங்கத்தின் விலை 10 ஆயிரத்து 550 ரூபாயாக உள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் விலை ஏற்ற இறக்கத்திற்கு காத்திருக்காமல் கையில் பணம் இருந்தால் அதனை தங்கத்தில் முதலீடு செய்வதை நடுத்தர வர்க்கத்தினர் வாடிக்கையாக கொண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விலை ரீடைல் சந்தையிலும் எதிரொலிக்கும் என்பதால் தங்கத்தை வாங்குவோர் திட்டமிட்டு வாங்குவது அவசியம். பண்டிகை காலம் தொடங்கியுள்ளதும், அமெரிக்காவில் அதீத கடன் மற்றும் நிதி பற்றாக்குறை அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சிக்கலாக மாறும் என முதலீட்டாளர்கள் நம்புவதாலும் தங்கம் மீதான முதலீட்டு அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் கொஞ்சம் காத்திருந்து தங்கத்தில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.