- Home
- Business
- Gold Rate Today (October 27): தங்கம் விலை எவ்ளோ குறைந்தது தெரியுமா.?! விலை சரிவுக்கு காரணம் இதுதான்.!
Gold Rate Today (October 27): தங்கம் விலை எவ்ளோ குறைந்தது தெரியுமா.?! விலை சரிவுக்கு காரணம் இதுதான்.!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் லாபத்திற்காக தங்கத்தை விற்பது, அமெரிக்க டாலர் வலுவடைதல் போன்ற காரணங்களால் விலை சரிந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம் வெள்ளி விலை நிலவரம்
தீபாவளிக்குள் தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை குறைந்தள்ளதால் நடுத்தர வர்க்கத்தினரும், இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதேபோல் வெள்ளி விலையில் ஏற்றம் இல்லாததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 11 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 91,600 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1 கிராம் 170 ரூபாய்க்கும் 1 கிலோ பார்வெள்ளி 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை சரிவுக்கு காரணம் இதுதான்
தங்கம் விலை சரிவடைந்து வரும் நிலையில் அதனை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சந்தை நிபுணர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். சர்வதேச முதலீட்டாலர்கள் நீண்டகால ஏற்றத்திற்குப் பிறகு லாபத்திற்காக தங்கத்தை விற்றது விலை சரிய காரணமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா-சீனா இடையேயான ஏற்பட்டு வரும் இணக்கம், ரூபாய் மதிப்புக்கு எதிரான அமெரிக்க டாலர் வலுவடைதல், தங்கம் கையிருப்பு அதிகரிப்பு , சில மத்திய வங்கிகள் தங்கத்தை விற்பது ஆகியவையும் தங்கம் விலை குறைய காரணமாக பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.