- Home
- Business
- Gold Rate Today (October 24): இன்றைய தங்கம் விலை என்ன தெரியுமா?! வெள்ளி விலை சரிவடைய காரணம் இதுதான்.!
Gold Rate Today (October 24): இன்றைய தங்கம் விலை என்ன தெரியுமா?! வெள்ளி விலை சரிவடைய காரணம் இதுதான்.!
சென்னையில் இரண்டு நாட்கள் சரிவுக்குப் பிறகு ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சந்தை நிலவரங்கள், பொருளாதார பதற்றங்கள் இந்த விலை மாற்றங்களுக்குக் காரணம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த 2 நாட்களாக குறைந்து இருந்த தங்கம் விலையில் இன்று சிறிது ஏற்றம் காணப்படுகிறது. இருந்த போதிலும் வெள்ளி விலை சரிவடைந்துள்ளது. இதற்கு சர்வதேச காரணங்கள் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து 11 ஆயிரத்து 540 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து 92,320 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1 கிராம் 171 ரூபாய்க்கும் 1 கிலோ பார்வெள்ளி 171 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விலை குறைய காரணம் இதுதான்
சர்வதேச சந்தையில் தங்கம் தேவை அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களே தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய காரணமாக நிதி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச போர் போன்ற பதற்றங்கள் ஏற்கனவே தங்க விலையை உயர்த்தியுள்ளன. உலக நாணய நிலை, பொருளாதார நெருக்கடி, இந்தியா மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களின் விருப்பங்கள் தங்கத்தை எப்போதும் விலை உயர்ந்த முதலீட்டு வகையாக மாற்றுகின்றன. எனவே, தங்கத்தின் விலை உயர்வை வெறுமனே சந்தை மாற்றம் என்று நினைத்தால் தவறு; அது உலகளாவிய மற்றும் உள்ளூர் பொருளாதார சூழல்களின் ஒட்டுமொத்த விளைவாக இருக்கிறது.
அமெரிக்கா டாலர் மதிப்பு குறையும்போது, உலக சந்தையில் தங்கம் விலை அதிகரிக்கும். ஏனெனில் தங்கம் பொதுவாக டாலரில் வர்த்தகம் செய்யப்படுகிறது, டாலர் பலவீனமான நேரங்களில் முதலீட்டாளர்கள் தங்கத்தை கையிருப்பாக வாங்கி வைப்பதற்கான விருப்பம் அதிகமாகிறது. அதே நேரத்தில், உலக பொருளாதார நெருக்கடி, போர், அரசியல் பதற்றம் போன்ற காரணங்களும் தங்கத்தின் பாதுகாப்பான முதலீட்டு தன்மையை வலுப்படுத்துகின்றன.