Gold Rate Today October 22: காலையிலேயே வந்த சந்தோஷ செய்தி.! தங்கம் விலை அதிரடி சரிவு.!
Gold Rate Today Oct 22: தீபாவளிக்கு பிறகு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 குறைந்து இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கவனம் செலுத்துவதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொஞ்சம் இறங்கி வந்த தங்கம்
தீபாவளிக்கு பிறகு சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்து இல்லத்தரசிகளை இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆபரண தங்கம் விலை ஏறிய வேக்தில் குறைந்துள்ளதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் நகை கடைகளில் குவிந்து வருகின்றனர். அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு இரட்டை சந்தோஷம்தான்
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ரூ.11700க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 2400 ரூபாய் குறைந்து 93,600 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராம் 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை விட 2 ரூபாய் குறைவாகும். ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை மேலும் சரியும்
அமெரிக்கவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து சந்தையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது வரும் வாரத்திலும தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.