- Home
- Business
- Gold Rate Today (நவம்பர் 11) : மீண்டும் விண்ணை நோக்கி பாயும் தங்கம்.! விலையை கேட்டு இல்லத்தரசிகள் மயக்கம்.!
Gold Rate Today (நவம்பர் 11) : மீண்டும் விண்ணை நோக்கி பாயும் தங்கம்.! விலையை கேட்டு இல்லத்தரசிகள் மயக்கம்.!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்து, ஒரு சவரன் ₹93,600-ஐ எட்டியுள்ளது. சர்வதேச முதலீடுகள் அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கம் வெள்ளி நிலவரம்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 2 வது நாளாக அதிகரித்துள்ளது. கிராமுக்கு 220 ரூபாய் விலை அதிகரித்துள்ளதால் திருமணம் வைத்துள்ளவர்களும் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த வாரம் விலை குறைந்திருந்த நிலையில் தற்போது தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இனி எப்போது குறையும் எனவும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 220 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 700 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 1,760 ரூபாய் அதிகரித்து93,600 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 1 கிராம் வெள்ளி 170 ரூபாய்க்கும் 1 கிலோ பார்வெள்ளி 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்துள்ளது.
உள்ளூர் விலை, சர்வதேச காரணம்.!
அதேபோல் மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆபரணத்தங்கத்தின் விலை 11 ஆயிரத்து 700 ரூபாயாக உள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் விலை அதிகரித்தாலும் தங்கத்தில் முதலீடு செய்வதை நடுத்தர வர்க்கத்தினர் வாடிக்கையாக கொண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விலை ரீடைல் சந்தையிலும் எதிரொலிக்கும் என்பதால் தங்கத்தை வாங்குவோர் திட்டமிட்டு வாங்குவது அவசியம்.
இந்த விலை ரீடைல் சந்தையிலும் எதிரொலிக்கும் என்பதால் தங்கத்தை வாங்குவோர் திட்டமிட்டு வாங்குவது அவசியம். பண்டிகை காலம் தொடங்கியுள்ளதும், அமெரிக்காவில் அதீத கடன் மற்றும் நிதி பற்றாக்குறை அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சிக்கலாக மாறும் என முதலீட்டாளர்கள் நம்புவதாலும் தங்கம் மீதான முதலீட்டு அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் கொஞ்சம் காத்திருந்து தங்கத்தில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.