- Home
- Business
- அம்மாடியோவ்.! இனி தங்கம் வெள்ளி வாங்குவதற்கு வாய்ப்பே இல்லை.! ரூ.12,000 உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி
அம்மாடியோவ்.! இனி தங்கம் வெள்ளி வாங்குவதற்கு வாய்ப்பே இல்லை.! ரூ.12,000 உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,04,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலகளாவிய பொருளாதார சூழல், ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் நகை வாங்கும் ஆசையே விட்டு போகும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் உள்ளூர் தேவை அதிகரிப்பு காரணமாக, சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,900க்கும், சவரன் ரூ.1,03,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இன்றைய (ஜனவரி 12) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1760 உயர்ந்து ரூ.1,04,960ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ரூ.13,120ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 14,313ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 114,504ஆக விற்பனையாகிறது.
அதேபோல் தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. வெள்ளி விலையில் நேற்று எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. அதாவது கிராமிற்கு ரூ.12 உயர்ந்து ரூ.287க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.287,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்றவை தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளன. மேலும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை கையிருப்பு வைப்பதும் சர்வதேச சந்தையில் தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை உயர்த்துகிறது. பங்குச்சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

