- Home
- Business
- Gold Rate Today (August 20): ஆவணியில் தொடரும் அதிர்ஷ்டம்.! சரசரவென குறையும் தங்கம் விலை.! வெள்ளி விலையும் குறைந்ததால் நகை விற்பனை ஜோர்.!
Gold Rate Today (August 20): ஆவணியில் தொடரும் அதிர்ஷ்டம்.! சரசரவென குறையும் தங்கம் விலை.! வெள்ளி விலையும் குறைந்ததால் நகை விற்பனை ஜோர்.!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைந்து ரூ.9180 ஆகவும், சவரன் ரூ.73,440 ஆகவும் உள்ளது. வெள்ளி விலையும் குறைந்து கிராமுக்கு ரூ.125 ஆக விற்பனையாகிறது. தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தங்கம், வெள்ளி விலை சரிவு.!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இரண்டாவது நாளாக ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளதால் திருமண ஏற்பாடு செய்துள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் நகை கடைக்கு சென்று வருகின்றனர். அதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக குறைந்து பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுதான் இன்றைய விலை நிலவரம்.!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ரூ,9180க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 440 ரூபாய் குறைந்து 73,440 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 125 ரூபாய்க்கு விற்பனையானது. 1 கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
விலை மேலும் சரியுமாம்.!
அமெரிக்கவின் வரி விதிப்பு, சர்வதேச பொருளாதார நிலவரங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஆர்வத்தை தூண்டியதால் அவர்கள் உலோகங்களை தவிர்த்து சந்தையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இது வரும் வாரத்திலும தொடரும் என்பதால் தங்கம் விலை மேலும் சரியும் என தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.