- Home
- Business
- Gold Rate: நடுத்தர மக்களுக்கு கிடைத்த குட் நியூஸ்.! அடுத்த 6 மாதத்திற்கு தங்கம் விலை குறித்த கவலை வேண்டாம்.!
Gold Rate: நடுத்தர மக்களுக்கு கிடைத்த குட் நியூஸ்.! அடுத்த 6 மாதத்திற்கு தங்கம் விலை குறித்த கவலை வேண்டாம்.!
கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் அடுத்த 6 மாதங்களுக்கு கவலை வேண்டாம் என கூறியுள்ளார். தங்கம் வாங்க திட்டமிடுபவர்களுக்கு இது ஒரு நிம்மதியான செய்தியாகும்.

இன்னும் உயருமா? இல்லை குறையுமா?
கடந்த ஒறாண்டாக தங்கம் வாங்க நினைப்பவர்களின் மனதில் ஒரே கேள்வி – “இன்னும் உயருமா? இல்லை குறையுமா?” உலக சந்தையில் பல மாற்றங்கள் நடந்தாலும், தங்க விலை ஏற்றத்துடன்–சரிவுடன் காட்சியளித்து வந்தது. இந்த நிலை தொடருமா என்பதே வாங்குபவர்களுக்கு பெரிய குழப்பமாக இருந்தபோது, பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் வழங்கிய தகவல் பலருக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் ஏன் இவ்வளவு உயர்ந்தது?
கொரோனா காலத்திலிருந்து தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து பலமடைந்தது. 2025 ஆரம்பம் வரை தங்கம் வேகமாக ஏறி, சில மாதங்களில் ரூ.10,000–12,000 வரை கூட அதிகரித்தது. ஆனால் பின்னர் எதிர்பாராத வீழ்ச்சி, மீண்டும் சிறிய உயர்வு என ஊசலாட்டம் தொடர்ந்தது. இதனால்தான் பொதுமக்கள் வாங்க அஞ்சும் நிலை உருவானது.
ரஷ்யா தங்கம் விற்றதா?
சில ஊடகங்கள் ரஷ்யா தங்கத்தை பெரிய அளவில் விற்றதாக கூறியிருந்தாலும், அது உறுதியான தகவல் அல்ல என்று ஆனந்த் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். ரஷ்ய அரசு ஊடகங்கள் உண்மை தரவுகளை வெளிப்படுத்தாத வாய்ப்பு இருப்பதாகவும், சர்வதேச நம்பகமான தரப்புகளில் இருந்து வரும் தகவல்களையே நம்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அடுத்த 6 மாதங்களில் தங்க விலை நிலை?
“தங்கம் உடனடியாக மீண்டும் 50% உயராது. வரப்போகும் காலத்தில் அதிகபட்சம் 5%–15% அளவில்தான் மாற்றம் இருக்கலாம்” என அவர் கூறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கம் ஏற்கனவே 50%–60% வரை உயர்ந்திருப்பதால் சந்தை தற்காலிக ஓய்வை எடுத்துள்ளதாகவும், அடுத்த ஆறு மாதம் பெரிய ஏற்றக் குறைவு வர வாய்ப்பு இல்லை என்றும் விளக்கம் அளித்தார். இடையிலே சிறிய உயர்வும் சரிவும் இருக்கும், ஆனால் அதுவே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
வாங்குபவர்களுக்கு நிம்மதி!
இந்த தகவல் நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரிய நற்செய்தியாக பார்க்கப்படுகிறது. திருமணம், சேமிப்பு அல்லது முதலீட்டுக்காக தங்கம் வாங்க நினைப்பவர்கள் அடுத்த சில மாதங்களில் அவசரமாக வாங்க வேண்டிய அவசியமில்லை. விலை அதிகமாக ஏற வாய்ப்பு குறைவதால் அடுத்த 6 மாதம் தங்கம் நிலையான பாதையில் பயணிக்கும் என நிபுணர் கருத்து தெரிவிக்கிறார். மொத்தத்தில் – தங்கம் பீக் தாண்டி இப்போது சுமுகமான படியில் செல்கிறது. கவலைப்பட வேண்டாம், ஆய்வு செய்து அறிவுடன் வாங்குங்கள்!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

