MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தங்க நகை வாங்குவதில் புதிய மாற்றம்... இனி இது கட்டாயம்.!

தங்க நகை வாங்குவதில் புதிய மாற்றம்... இனி இது கட்டாயம்.!

இந்தியாவில் தங்கம் வாங்கும் பாதுகாப்பை அதிகரிக்க, ஒவ்வொரு நகைக்கும் தனித்துவமான, மீண்டும் பயன்படுத்த முடியாத HUID எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. இந்த புதிய திட்டம், வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும்.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 04 2026, 12:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தங்க ஹால்மார்க் விதிகள்
Image Credit : Getty

தங்க ஹால்மார்க் விதிகள்

இந்தியாவில் தங்கம் வாங்கும் விதிகளில் விரைவில் முக்கிய மாற்றங்கள் உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பும் நம்பிக்கையும் அதிகரிக்க, மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் வகையில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. நகைக்கடைகள் உள்ளிட்ட துறையினரின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

25
தங்கம் வாங்கும் விதிகள்
Image Credit : Getty

தங்கம் வாங்கும் விதிகள்

புதிய திட்டத்தின் முக்கிய அம்சமாக, ஒவ்வொரு தங்க நகைக்கும் தனித்துவமான HUID (Hallmark Unique Identification) எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. இந்த எண் நகையின் வடிவம், அளவு போன்ற தனிச்சிறப்புகளின் அடிப்படையில் வழங்கப்படும். இதன் மூலம் போலி நகைகள் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும். மேலும், ஒரு முறை வழங்கப்பட்ட HUID எண்ணை மீண்டும் பயன்படுத்த முடியாது என்பதும் முக்கியமான விதியாகும்.

Related Articles

Related image1
MK Stalin Net Worth: சொந்த கார் இல்லை.. தங்கம் இல்லை.. கையில் ரூ.10,000 மட்டுமே.. முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு!
Related image2
Gold Rate Today: ஷாக் மேல் ஷாக்! தினமும் ஏறும் தங்கம் விலை! வாங்கணுமா? காத்திருக்கணுமா?
35
மோசடி தடுக்கப்படும்
Image Credit : Getty

மோசடி தடுக்கப்படும்

ஒரு நகை உருக்கப்பட்டாலும் அதற்கான HUID எண்ணை மீண்டும் வேறு நகைக்கு பயன்படுத்த அனுமதி இருக்காது. இதனால், ஒரே எண் பல நகைகளுக்கு பயன்படுத்தப்படும் மோசடி முறைகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்கத்தின் தூய்மையை உறுதி செய்ய முடியும்.

45
தங்க தூய்மை விதிகள்
Image Credit : Getty

தங்க தூய்மை விதிகள்

இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கான முக்கிய காரணம், கடந்த காலங்களில் வந்த புகார்கள் தான். சிலர் வாங்கிய நகையின் ஹால்மார்க் எண் இருந்தாலும், அதன் தூய்மை வேறுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஒரே HUID எண் பல பொருட்களுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை தடுக்கவே அரசு இந்த கடுமையான விதிகளை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

55
தங்க சான்றிதழ் விதிகள்
Image Credit : Getty

தங்க சான்றிதழ் விதிகள்

இத்திட்டத்திற்கு நகைத் துறை நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. எதிர்காலத்தில், ஹால்மார்க் விவரங்கள், படங்கள் மற்றும் எடை போன்ற தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும். செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் போலி ஹால்மார்க் கண்டறியப்படும். 2025-ல் சில மாவட்டங்களில் இந்த திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு, நல்ல பலன் கிடைத்துள்ளது. இதனால், தங்கம் வாங்கும் முறையில் அதிக வெளிப்படைத்தன்மை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்கம்
தங்க நகை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Rate Today: ஷாக் மேல் ஷாக்! தினமும் ஏறும் தங்கம் விலை! வாங்கணுமா? காத்திருக்கணுமா?
Recommended image2
டிமார்ட்டின் அசுர வளர்ச்சி.. பங்கு விலை ராக்கெட் வேகத்தில் புதிய உச்சம்?
Recommended image3
பெயர் பொருந்தாவிட்டால் பான் கிடையாது.. புதிய ரூல்ஸ் வந்தாச்சு.. இந்தியர்களே அலெர்ட்!
Related Stories
Recommended image1
MK Stalin Net Worth: சொந்த கார் இல்லை.. தங்கம் இல்லை.. கையில் ரூ.10,000 மட்டுமே.. முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு!
Recommended image2
Gold Rate Today: ஷாக் மேல் ஷாக்! தினமும் ஏறும் தங்கம் விலை! வாங்கணுமா? காத்திருக்கணுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved