MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • MK Stalin Net Worth: சொந்த கார் இல்லை.. தங்கம் இல்லை.. கையில் ரூ.10,000 மட்டுமே.. முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு!

MK Stalin Net Worth: சொந்த கார் இல்லை.. தங்கம் இல்லை.. கையில் ரூ.10,000 மட்டுமே.. முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு!

MK Stalin Net Worth: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Mar 30 2026, 09:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்
Image Credit : Asianet News

முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நடிகரும், தவெக தலைவருமான விஜய், காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு
Image Credit : X/@arivalayam

முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு

வேட்புமனு தாக்கலின்போது முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன. வேட்புமனுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சொத்து மற்றும் வருமான விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதாவது கடந்த நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கலின் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலினின் அசையும் சொத்துக்கள் ரூ.3.30 கோடி ஆகும். அசையா சொத்துக்கள் ரூ.2.96 கோடி ஆகும்.

Related Articles

Related image1
Vijay Net Worth: விஜய்யிடம் இத்தனை கோடி சொத்துக்களா? வைரமும், தங்கமும், சொகுசு கார்களும்.. வேட்புமனுவில் தகவல்!
Related image2
அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவிட நான்.. என்னை ஒன்றும் செய்யாது..! மு.க.ஸ்டாலின் பெருமிதம்
34
துர்கா ஸ்டாலின் சொத்து மதிப்பு
Image Credit : our own

துர்கா ஸ்டாலின் சொத்து மதிப்பு

ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் அசையும் சொத்துக்கள் ரூ.1.32 கோடி ஆகும். அசையா சொத்துகள் ரூ.2.10 கோடி ஆகும். முதல்வர் ஸ்டாலினின் மொத்த வருமானம் 31 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில், அவரது மனைவி துர்கா ஸ்டாலினின் வருமானம் 5.33 லட்சம் ரூபாய் ஆகும். கையிருப்பு ரொக்கத்தைப் பொறுத்தவரை, முதல்வரிடம் 10,000 ரூபாயும், துர்கா ஸ்டாலினிடம் 40,000 ரூபாயும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொந்த கார் கூட இல்லை

குறிப்பிடத்தக்க அம்சமாக, முதல்வர் ஸ்டாலின் பெயரில் எந்தவிதமான பைக், கார் உள்பட சொந்த வாகனங்களோ அல்லது தங்கம் மற்றும் வெள்ளி நகைகளோ இல்லை என்பது பிரமாணப் பத்திரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான 720 கிராம் பழைய தங்க நகைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
விஜய்யின் சொத்து மதிப்பு இதோ
Image Credit : Asianet News

விஜய்யின் சொத்து மதிப்பு இதோ

இதேபோல் தவெக தலைவர் விஜய்யின் சொத்து மதிப்பும் வெளியாகி இருந்தது. அதாவது விஜய்யுடன் இருக்கும் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி ஆகும். அசையா சொத்து மதிப்பு ரூ.115 கோடி ஆகும் என விஜய் தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பூர்வீக சொத்தின் மதிப்பு 21.83 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தன்னிடம் ரூ.1.20 கோடி மதிப்பில் 883 கிராம் தங்கம் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். 2 பிஎம்டபிள்யு, லெக்சஸ், டோயட்டோ வெல்பயர் உள்ளிட்ட கார்கள் சொந்தமாக இருப்பதாக விஜய் வேட்புமனுவில் கூறியுள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
அரசியல் சுவாரஸ்யம்
மு. க. ஸ்டாலின்
திமுக
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Power Cut: போன், லேப்டாப்பில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? இதோ லிஸ்ட்!
Recommended image2
Heavy Rain: மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகம்! விடாமல் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை! கோவை, சென்னையின் நிலை என்ன?
Recommended image3
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை முக்கிய இடங்களில் 6 முதல் 8 மணி நேரம் மின்தடை.. லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?
Related Stories
Recommended image1
Vijay Net Worth: விஜய்யிடம் இத்தனை கோடி சொத்துக்களா? வைரமும், தங்கமும், சொகுசு கார்களும்.. வேட்புமனுவில் தகவல்!
Recommended image2
அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவிட நான்.. என்னை ஒன்றும் செய்யாது..! மு.க.ஸ்டாலின் பெருமிதம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved