சரசரவென சரிந்த தங்கம் விலை; ஒரு கிராமுக்கு இவ்வளவு குறைவா.?
Today Gold Rates:தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறி இறங்கி வருகிறது. சமீபத்தில் சவரனுக்கு ரூ.3000 உயர்ந்துள்ளது. 2025 இறுதிக்குள் தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயை எட்டும் எனவும் கூறப்படுகிறது.
Today Gold Rates
Today Gold Rates - தங்கத்தில் முதலீடு - மக்கள் ஆர்வம்
தங்கத்தின் மீதான ஆர்வம் மக்களுக்கு எப்போதும் குறையவில்லை. அதற்கு ஏற்றார் போல தங்கத்தின் விலையும் கடந்த ஒரு மாதமாக ஏறி இறங்கி வருகிறது. தங்கத்தின் விலை உச்சியில் இருந்தாலும், குறைவாக இருந்தாலும் நகைக்கடைகளில் தங்கத்தை வாங்க மக்கள் கூட்டம் நாள்தோறும் கூடிவருகிறது.
குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி இதுவரை இல்லாத வகையில் 60ஆயிரம் என்ற உச்சத்தை தொட்ட தங்கம் விலை, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது.
singapore gold 1
Gold Rates - 4200 ரூபாய் சரிந்த தங்கம் விலை
அடுத்த சில நாட்களில் தலைகீழாக மாறியது. குறிப்பாக 10 நாட்களில் 4200 ரூபாய் வரை சவரனுக்கு தங்கத்தின் விலை குறைந்தது, இது தான் நல்ல சான்ஸ் என மக்கள் தங்கத்தை வாங்கினர். மேலும் குறைந்து வரும் தங்கத்தின் விலையானது எந்த நேரமும் மீண்டும் உச்சத்தை அடையும் என கூறப்பட்டது.
அதற்கு ஏற்றார் போல அடுத்தடுத்த நாட்களில் விலையானது கடுமையாக உயர்ந்தது. அந்த வகையில் ஒரு சவரன் 55 ஆயிரத்து 480 என்ற விலையில் விற்பனையான நிலையில் இருந்து படிப்படியாக அதிகரித்து 58,400 ரூபாய்க்கு ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Gold Rates in Chennai
Gold Rates - ஒரே வாரத்தில் உச்சம் சென்ற தங்கம் விலை
ஒரே வாரத்தில் சுமார் 3000 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். ரஷ்யா-உக்ரைன் போரால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டாலரில் முதலீடு செய்தவர்கள் தற்போது தங்கத்தில் மீண்டும் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
Gold Rates in Coimbtore
Gold Rates - ஒரே ஆண்டில் உயரப்போகுது தங்கம் விலை
இந்த நிலையில் மத்திய வங்கியின் தங்கம் கொள்முதல் மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதக் குறைப்பு போன்ற காரணங்களால், தங்கத்தின் விலை 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் ரூபாயை எட்டும் என கூறப்படுகிறது. எனவே தங்கத்தை வாங்க நினைக்கும் நடுத்தர வர்க்க மக்கள் நகைகடைகளில் மட்டுமே பார்க்கும் சூழல் உருவாகும் என கூறப்படுகிறது.
Today Gold Rates
Today Gold Rates - இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கிராமுக்கு ஒன்று 75 ரூபாய் உயர்ந்து கிராம் ஒன்றுக்கு 7,300க்கு தங்கம் விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 600 உயர்ந்து 58,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கிராமுக்கு 100 ரூபாய் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அந்த வகையில ஒரு கிராம் 7200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.