துள்ளிக்குதிக்கும் நகைப்பிரியர்கள் : இன்றும் குறைந்தது தங்கம் விலை.! 2 நாட்களில் மட்டும் இவ்வளவு சரிவா.?
தங்கத்தின் விலை சமீபகாலமாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை என்னவாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Gold rate
ஏறி இறங்கும் தங்கம் விலை
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் தங்கம் வாங்க முடியாத வகையில் விலை உச்சத்தை தொடும் என கூறப்படுவதால் தற்போதே தங்கத்தை வாங்கி வைக்க வேண்டும் என்ற காரணத்தால் நகைக்கடைகளில் நாள் தோறும் கூட்டம் அலைமோதுகிறது. திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்கம் வாங்குவது இந்தியாவில் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் இந்திய மக்கள் தங்க நகை மீது அதிகளவு ஈர்ப்பு கொண்டுள்ளனர்.
gold investment
தங்கத்தில் முதலீடு
தங்கத்தின் விலையானது கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு சவரன் 10ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் அடுத்த 14 ஆண்டுகளில் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 59,640 ரூபாய் என்ன புதிய உச்சத்தை தொட்டது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அடுத்த சில நாட்களிலையே தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. சவரனுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை குறைந்தது.
gold rate
ஒரு சவரன் 2 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு
தங்கத்தின் விலை குறைவிற்கு அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இந்தநிலையில் தங்கத்தின் விலையானது அடுத்த ஒரு சில ஆண்டுகளில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனிடையே கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வருகிறது.
gold rate today
இன்றைய தங்கம் விலை என்ன.?
அந்த வகையில் தங்கத்தின் விலையானது தற்போது குறைந்து வருகிறது. நேற்று (19.12.2024) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.65 குறைந்து 7,070 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,560க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று தங்கத்தின் விலையானது கிராமுக்கு 30 ரூபாய் குறைந்துள்ளது.
அதன் படி ஒரு கிராம் 7,040 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 56ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு 880 ரூபாய் குறைந்துள்ளது