Gold Rate Today: தங்கம் விலை மீண்டும் உயர்வு! போட்டி போட்டு விலை உயரும் வெள்ளி!
சர்வதேச நிலவரம் காரணமாக சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. இது திருமண ஏற்பாடுகள் செய்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

ஏறுமுகத்தில் தங்கம் வெள்ளி விலை
சர்வதேச நிலவரம் காரணமாக சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் முகூர்த்த நாட்கள் தொடங்கியுள்ள நிலையில் தங்கம் விலை உயர்ந்து வருவது திருமண ஏற்பாடுகள் செய்து வருவோருக்கு சிரமம் தரும் தகவலாக உள்ளது.
இன்றைய விலை விவரம்
நேற்றைய தினம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.9060 மட்டுமே இருந்தது. இதனால் இன்று கிராமுக்கு ரூ.45 உயர்வை பதிவு செய்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் விலை 360 ரூபாய் உயர்ந்து 72 ஆயிரத்து 840 ரூபாயாக உள்ளது. அதேபோல, 18 காரட் தங்கத்தின் விலை நேற்று ரூ.7480 இருந்தது. இன்று ரூ.35 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை நேற்று ரூ.119 மட்டுமே இருந்தது. இன்று ரூ.2 உயர்ந்துள்ளது.
இன்றைய விலை விவரம்
22 காரட் தங்கம்: 1 கிராம் விலை ரூ.9105
45 உயர்வு
8 கிராம் (1 சவரன்) = ₹9105 × 8 = ₹72,840
360 உயர்வு
வெள்ளி: 1 கிராம் விலை ரூ.121
கிராமுக்கு ரூ. 2 உயர்வு
இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணிகள்
- சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை நிலையாக இல்லை என்பதே முதல் காரணமாகும்
- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் சற்று மதிப்பு குறைவடைந்ததுள்ளது, அதன் தாக்கமும் விலை உயர காரணமாகும்.
- முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக தேடி வாங்கும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது.
- பண்டிகை சீசன் துவங்கும் முன் நகை உற்பத்தியாளர்கள் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது
அடடா இதுவும் ஒரு காரணமா?
சென்னை டிரேட் சென்டரில் செப்டம்பர் 12 முதல் 14 வரை நடைபெறும் ஜெம் & ஜுவல்லரி இந்தியா இன்டர்நேஷனல் ஃபேர் (GJIIF) கண்காட்சி திரட்டலும் ஆரம்பமாகியுள்ளது. இது போன்ற கண்காட்சிகள், வர்த்தகத்தின் மீது நேரடி தாக்கம் செலுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
விலை உயர வாய்ப்பு
மாநில மற்றும் மத்திய அரசின் வரி திட்டங்கள், வட்டி விகித மாற்றங்கள் மற்றும் சர்வதேச சூழல் ஆகியவை தொடர்ச்சியாக தங்கம், வெள்ளி விலையை மாற்றும். இந்த வார இறுதியில் சுமார் ரூ.50 முதல் ரூ.100 வரையிலான உயர்வும், சில சமயங்களில் விலை சரிவும் ஏற்படும் என மதிப்பீடு செய்யப்படுகிறது.
அதிக கவனிக்க வேண்டிய விஷயங்கள்
தங்கம் வாங்கும் முன் விற்பனையாளர்கள் வழங்கும் பில்லில் ஜிஎஸ்டி சேர்க்கப்பட்டதா என்பதை சரிபார்க்க வேண்டும். இன்றைய விலை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விலை 3% ஜிஎஸ்டி இல்லாத விலை ஆகும். அதனால் இறுதித் தொகை இன்னும் அதிகமாகும்.
உறுதிப்பத்திரம் பெறுவது அவசியம்
22 காரட் மற்றும் 18 காரட் தங்க நகைகளுக்கு சரியான ஹால் மார்க் சான்றிதழ் பெற வேண்டும். தற்போதைய விலை உயர்வை பயன்படுத்தி முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பவர்கள், விலை சரிவின் சூழல் உண்டாகும் வாய்ப்பையும் கருத்தில் கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.