- Home
- Business
- Gold Price Today: ரூ.75 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்.! விலையை கேட்டு இல்லத்தரிகள் மயக்கம்.!
Gold Price Today: ரூ.75 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்.! விலையை கேட்டு இல்லத்தரிகள் மயக்கம்.!
தங்கம் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து 9370 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 74,960 ரூபாயானதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது.

அனைவரும் விரும்பும் தங்கம்.!
வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய் கிழமை தங்கம் மற்றும் வெள்ள விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தங்கம் விலை 75 ஆயிரம் ரூபாயை நெருங்கியதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். இந்தியாவில் தங்கம் கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், முதலீட்டு சொத்தாகவும் கருதப்படுகிறது. தங்கத்தின் விலை சர்வதேச சந்தை, டாலர் மதிப்பு, தேவை-விநியோகம் ஆகியவற்றைப் பொறுத்து ஏற்ற இறக்கம் அடைகிறது.
முக்கிய நிழ்வுகளில் தங்கம்
திருமணங்கள், பண்டிகைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் தங்க நகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் தங்கம் ஒரு முதலீட்டு சொத்தாகவும் கருதப்படுகிறது, ஏனெனில் இது பொருளாதார நெருக்கடி காலங்களில் மதிப்பை பாதுகாக்கும் புகலிட சொத்தாக (safe-haven asset) செயல்படுகிறது. மேலும், தங்கம் மின்னணு உபகரணங்களில், குறிப்பாக மின்சுற்று பலகைகள் மற்றும் இணைப்பிகளில், அதன் உயர் மின் கடத்துத்திறன் காரணமாக பயன்படுத்தப்படுகிறது.
தொழில்துறையில் தங்கம் பயன்பாடு
மருத்துவத் துறையில், பல் மருத்துவம் மற்றும் சில சிகிச்சைகளில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது உயிரியல் ரீதியாக பொருந்தக்கூடியது. தொழில்துறையில், தங்கம் விண்வெளி உபகரணங்கள் மற்றும் பிற உயர் தொழில்நுட்ப பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து 9370 ரூபாய்க்கு விற்னை செய்யப்படுகிறது. சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து 74,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து 125 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ பார்வெள்ளி ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

