திடீர்னு ஜெட் வேகத்தில் ஏறிய தங்க விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?
இந்தியாவில் தங்கம் விலை ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. சில நாட்களாக விலை உயர்ந்து, நகை வாங்க விரும்புவோருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மே 16ல் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

Gold Silver Rate Today
இந்தியாவில் தங்கம் விலை தினமும் மாற்றம் காணும் நிலையில், சில நாட்களாக தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன் குறைந்த விலை நிலவிய நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்வு உள்ளது.
தங்கத்தின் விலை
தங்க விலை தொடர்ந்து உயர்வதால், நகை வாங்க விரும்பும் பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர வர்க்கம், கடுமையான நிதி சிரமங்களை சந்திக்கின்றனர். விலை உயர்வு, அவர்களின் நகை வாங்கும் திட்டத்தை தள்ளி வைக்க வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
நேற்று (மே 15) தங்கம் விலை குறைந்தது
மே 15 அன்று, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமத்திற்கு ரூ.195 குறைந்து, ரூ.8,610 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,560 குறைந்து, ரூ.68,660 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று (மே 16) தங்க விலை மீண்டும் உயர்வு
இன்றைய விலை நிலவரப்படி (மே 16), 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமத்திற்கு ரூ.110 உயர்ந்து, ரூ.8,720 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ரூ.69,760 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த சில நாட்களில் பார்த்து வந்த மிக உயர்ந்த விலை நிலையாகும்.