- Home
- Business
- நகைப்பிரியர்களுக்கு எதிர்பாராத திருப்பம்.! அதிரடியாக குறைந்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கு எவ்வளவு தெரியுமா.?
நகைப்பிரியர்களுக்கு எதிர்பாராத திருப்பம்.! அதிரடியாக குறைந்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கு எவ்வளவு தெரியுமா.?
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. ஒரு சவரன் 70,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவு நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate
Gold Rate Drop Today : தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 3 மாத காலத்தில் மட்டும் ஒரு சவரனுக்கு 20ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாக வர்த்தக போர் உருவாகும் நிலை ஏற்பட்டது.
Gold Rate Down
நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் 2025ஆம் ஆண்டு
இதனால் அனைத்து நாடுகளிலும் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகளவு தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக விஷேச நாட்கள், திருமண நிகழ்வுகளில் தங்க நகைகளை அதிகளவு மக்கள் அணிய விரும்புவார்கள். இந்த நிலையில் தங்கத்தின் விலை உயர்வால் நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
ஏறி இறங்கும் தங்கம் விலை
கடந்த வாரம் 3 நாட்களில் சுமார் 3 ஆயிரம் ரூபாய் வரை குறைந்திருந்த தங்கம் விலை அடுத்தடுத்த 2 நாட்களில் 4200 ரூபாய் வரை உயர்ந்து புதிய உச்சமாக ஒரு சவரன் 70ஆயிரத்தை தாண்டியது. இதனால் திருமண நிகழ்விற்காக தங்கம் வாங்க திட்டமிட்ட மக்களுக்கு கூடுதல் சுமையாக தங்கம் விலை மாறியுள்ளது.
குறைந்தது தங்கம் விலை
அந்த வகையில் கடந்த சனிக்கிழமை (12.04.2025) சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,770 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 70,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது சற்று குறைந்துள்ளது. அதன் படி, தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.8,755-க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 70,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.