தாறுமாறாக இன்றும் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கே இவ்வளவு அதிகரிப்பா.?
தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்த வகையில் நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
gold rate
புதியு உச்சத்தை தொட்ட தங்கம்
தங்கத்தின் விலையானது வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 47,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு சவரன் 60,200 ரூபாயை தொட்டுள்ளது. அதன் படி கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சவரன் ஒன்றுக்கு 12ஆயிரத்து 920 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவது நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
gold investment
தங்க முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்
அதே நேரத்தில் தங்கத்தை ஒரு முதலீடாக கருதி வாங்கி வைத்தவர்களுக்கு அதன் மதிப்பு உயர்ந்து வருவதால் மகிழ்ச்சியில் உள்ளனர். அதுவே தங்கள் பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக புதிதாக நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கு தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.
எனவே தங்கத்தின் விலையானது இந்தாண்டு இறுதிக்குள் 75ஆயிரத்தை தொட்டுவிடும் என்ற ஷாக் கொடுக்கும் தகவலையும் தங்கம் நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
gold rate
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை
நேற்று முன்தினம்( 22.1.2025) தங்கத்தின் விலையானது வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. அந்தவகையில் கிராம் ஒன்றுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,525க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 60,200 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த்த நிலையில் நேற்று தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது
gold rate today
இன்றும் அதிகரித்த தங்கம் விலை
இன்று தங்கத்தின் விலையானது நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அதிகரித்துள்ளது. அதன் படி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 7ஆயிரத்து 555 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 60,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.