MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தங்கக் கடன் தேவை 128% உயர்வு.. எந்த வங்கியில் குறைந்த வட்டி தெரியுமா? முழு லிஸ்ட் இதோ

தங்கக் கடன் தேவை 128% உயர்வு.. எந்த வங்கியில் குறைந்த வட்டி தெரியுமா? முழு லிஸ்ட் இதோ

தங்கத்தின் விலை உயர்வால் தங்கக் கடன்களின் தேவை அதிகரித்துள்ளது. எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி போன்ற வங்கிகள் மற்றும் என்பிஎப்சி-களின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு, ஆர்பிஐ விதிமுறைப்படி வழங்கப்படும் கடன் தொகையை இந்த கட்டுரை விவரிக்கிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 04 2026, 01:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தங்கக் கடன் வட்டி விகிதம்
Image Credit : Asianet News

தங்கக் கடன் வட்டி விகிதம்

கடந்த ஆண்டு முதல் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த தொடக்கத்திலும் தங்கம் தொடர்ந்து உயர்வு கண்டதால், அதனுடன் தொடர்புடைய தங்கக் கடன்களின் தேவையும் அதிகரித்துள்ளது. சமீபத்திய மத்திய வங்கி தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் தங்கத்தை அடமானமாக வைத்து பெறப்பட்ட கடன்கள் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 128% வரை உயர்ந்துள்ளன. அவசர நிதி தேவைக்கு மக்கள் அதிகமாக தங்கக் கடனை தேர்வு செய்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

25
குறைந்த வட்டி தங்கக் கடன்
Image Credit : Google

குறைந்த வட்டி தங்கக் கடன்

வங்கிகளில் பல்வேறு வகையான கடன்கள் கிடைக்கின்றன. பர்சனல் லோன், வீட்டு கடன், வாகன கடன் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது தங்கக் கடன் பாதுகாப்பாக பலர் கருதுகின்றனர். காரணம், இதில் நம்மிடம் உள்ள தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் பெற முடியும். இதனால் சிபில் ஸ்கோர் அதிக முக்கியத்துவம் பெறாது. மேலும், அடமானம் இருப்பதால் வட்டி விகிதமும் பல சமயங்களில் குறைவாக இருக்கும். அவசர சூழ்நிலையில் விரைவாக கிடைக்கும் கடன்களில் தங்கக் கடன் முக்கிய இடம் பெற்றுள்ளது.

Related Articles

Related image1
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
Related image2
ரூ.2000 நோட்டுகள் இருக்கா.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்!
35
தங்கம் அடமானம் கடன்
Image Credit : PR

தங்கம் அடமானம் கடன்

ஆர்பிஐ விதிமுறைப்படி, தங்கத்தின் சந்தை மதிப்பை கொண்டு கடன் வழங்கப்படுகிறது. பொதுவாக ரூ.2.5 லட்சம் வரை கடன் எடுத்தால் தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் கிடைக்கும். ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் எடுத்தால் 80% வரை, அதற்கு மேல் எடுத்தால் சுமார் 75% வரை மட்டுமே கடன் வழங்கப்படும். இதனால் தங்கத்தின் எடை மற்றும் சந்தை விலை ஆகியவை கடன் தொகையை தீர்மானிக்கின்றன.

45
எஸ்பிஐ வங்கியில் ஆண்டு வட்டி
Image Credit : Google

எஸ்பிஐ வங்கியில் ஆண்டு வட்டி

பெரிய வங்கிகளில் தங்கக் கடன்களுக்கு போட்டியான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. எஸ்பிஐ வங்கியில் ஆண்டு வட்டி சுமார் 9% முதல் தொடங்குகிறது. ரூ.20,000 முதல் ரூ.50 லட்சம் வரை கடன் பெறலாம். பிஎன்பி வங்கியில் வட்டி சுமார் 9.25% முதல், அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடன் கிடைக்கும். ஹெச்டிஎப்சி வங்கி தங்கக் கடன்களுக்கு 9.10% முதல் 19% வரை வட்டி வசூலிக்கிறது. குறைந்தபட்சம் ரூ.25,000 முதல் அதிகபட்சமாக ரூ.3.5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.

55
தங்கக் கடன்களுக்கு வட்டி விகிதங்கள்
Image Credit : Google

தங்கக் கடன்களுக்கு வட்டி விகிதங்கள்

இதற்கு ஐசிஐசிஐ வங்கி தங்கக் கடன்களுக்கு சுமார் 8.75% முதல் 16.75% வரை வட்டி வசூலிக்கிறது. மேலும் முத்தூட் ஃபைனான்ஸ் மற்றும் மணப்புரம் ஃபைனான்ஸ் போன்ற என்பிஎப்சி நிறுவனங்களும் தங்கக் கடன்களை வழங்குகின்றன. இங்கு வட்டி சுமார் 9.90% முதல் 10.90% வரை தொடங்குகிறது. வட்டி விகிதங்கள் மற்றும் கடன் தொகைகள் காலத்துக்கு காலம் மாறக்கூடும் என்பதால், தங்கக் கடன் எடுப்பதற்கு முன் 2 அல்லது 3 வங்கிகளில் விவரங்களை ஒப்பிட்டு பார்ப்பது நல்லது ஆகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்க நகை கடன்
தங்கம்
இன்றைய தங்கம் விலை
தங்க விலை
வங்கி

Latest Videos
Recommended Stories
Recommended image1
சம்பளம் இரட்டிப்பு.. அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வருமா? சூப்பர் அப்டேட்
Recommended image2
மார்ச் மாத மெகா கிப்ட்..! Airtel வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம்.. டேட்டாவுக்கு இனி எல்லையே இல்லை..
Recommended image3
ரூ. 2,000 நோட்டு இருக்கா..? கவலைய விடுங்க.. RBI சொன்ன ஹேப்பி நியூஸ்..!
Related Stories
Recommended image1
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
Recommended image2
ரூ.2000 நோட்டுகள் இருக்கா.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved