- Home
- Business
- Gold Price Today (November 06): பாதையை மாற்றும் தங்கம்.! மீண்டும் ஏறுமுகத்தில் ஆபரணத்தங்கம்.!
Gold Price Today (November 06): பாதையை மாற்றும் தங்கம்.! மீண்டும் ஏறுமுகத்தில் ஆபரணத்தங்கம்.!
சென்னையில் மூன்று நாட்கள் சரிவுக்குப் பிறகு ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.90,000-ஐ எட்டியுள்ள நிலையில், உலகப் பொருளாதார சூழல் மற்றும் டாலர் மதிப்பு மாற்றங்கள் விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஆபரணத்தங்கம் வெள்ளி விலை
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை மீண்டும் மேல் நோக்கி செல்ல தொடங்கியுள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் கவலை அடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளதால் சிறுமுதலீட்டாளர்கள் முதலீடுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்றுடன் மீண்டும் உயர்வு பாதையில் திரும்பியுள்ளது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து தற்போது ரூ.11,250 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.164 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை தற்போது ரூ.1,64,000 ஆக உள்ளது.
காரணத்தை தெரிஞ்சுகிட்டா நல்லது.!
இந்த விலை உயர்வு, தங்கம் சந்தையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சரிந்திருந்ததால் சிறு முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியிருந்தனர். ஆனால் இப்போது மீண்டும் விலை உயர்வதால் அவர்கள் தங்களது முதலீட்டு முடிவுகளை நிறுத்தி காத்திருக்கின்றனர்.
பொருளாதார நிபுணர்கள் கூறுவதாவது, உலகளாவிய பொருளாதார நிலைமை சாதகமற்றதாக மாறி வருவதும், மத்திய வங்கிகள் தங்கத்தில் தங்களது கையிருப்பை அதிகரித்திருப்பதும், டாலர் மதிப்பில் ஏற்படும் அலைச்சலும் தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும்.
தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீட்டு வழியாகக் கருதப்படுவதால், சந்தை குழப்பம் அதிகரிக்கும் வேளைகளில் முதலீட்டாளர்கள் தங்கத்தைக் கடைசி தஞ்சமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் தற்போது விலை மீண்டும் உயரும் நிலையில், நிபுணர்கள் "காத்திருந்து முதலீடு செய்யுங்கள்" என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.