MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வாகன ஓட்டிகளுக்கு ஷாக்.. பெட்ரோல், டீசல், கேஸ் விலை 5 நாள்ல ஏறுமா? உஷார்.!

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்.. பெட்ரோல், டீசல், கேஸ் விலை 5 நாள்ல ஏறுமா? உஷார்.!

மேற்கு ஆசிய பதற்றத்தால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலைகளை உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : May 02 2026, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியாவில் விலை உயர்வு நெருங்குது
Image Credit : ANI

இந்தியாவில் விலை உயர்வு நெருங்குது

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் பதற்றம் உலக எண்ணெய் சந்தையை அதிரவைத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு எல்.பி.ஜி சிலிண்டர் விலைகளை திருத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. அதிகாரப்பூர்வ தகவல்களை மேற்கோள் காட்டிய செய்திகளின் படி, பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயர வாய்ப்பு இருப்பதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.40 முதல் ரூ.50 வரை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

25
கச்சா எண்ணெய் ஏற்றம்
Image Credit : Asianet News

கச்சா எண்ணெய் ஏற்றம்

இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், கடந்த சில ஆண்டுகளாக நிலைத்திருந்த எரிபொருள் விலையில் இது முதல் பெரிய உயர்வாக அமையும். 2022க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போதைய சூழல் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் செலவினம் நேரடியாக பாதிக்கப்படும் என்ற கவலையும் உருவாகியுள்ளது.

Related Articles

Related image1
Cylinder Price Hike: காலையிலேயே பேரதிர்ச்சி! ஒரே நாளில் ரூ.1000 எகிறிய சிலிண்டர் விலை! வீட்டு உபயோக சிலிண்டர் நிலவரம்?
Related image2
கல்லூரி மாணவிகளுக்கு ஏற்ற டாப் 5 ஸ்கூட்டர்கள்.. விலை, வெயிட் கம்மி.. மைலேஜ் அதிகம்.. முழு லிஸ்ட்!
35
கச்சா எண்ணெய் விலை ஏற்றம்
Image Credit : X

கச்சா எண்ணெய் விலை ஏற்றம்

விலை உயர்வுக்கு முக்கிய காரணம் உலகளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றமே. மேற்கு ஆசியப் பகுதிகளில் நிலவும் போர் சூழ்நிலை, எண்ணெய் உற்பத்தி மற்றும் சப்ளையில் ஏற்படும் அச்சம் அதிகரித்துள்ளது. கடல் மார்க்க போக்குவரத்து பாதிப்பு, கப்பல் செலவில் உயர்வு, நீண்டகால அரசியல் பதற்றம் போன்றவை சந்தையை மேலும் சிக்கலாக்கி, விலையை வேகமாக உயர்த்தியுள்ளன.

45
பெட்ரோல், டீசல் விலை மாற்றம்
Image Credit : ANI

பெட்ரோல், டீசல் விலை மாற்றம்

இந்நிலையில், இந்திய எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் அதிக செலவில் கச்சா எண்ணெயை வாங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. ஆனால், சில்லறை விலை மாற்றமின்றி தொடர்ந்ததால், அதன் நஷ்டம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், மானியம் அல்லது வரி குறைப்புகள் மூலம் சுமையை தாங்குவது அரசுக்கு சவாலாக வருகிறது.

55
 உலக சந்தை நிலவரம்
Image Credit : Getty

உலக சந்தை நிலவரம்

இதனால், அடுத்த 5 முதல் 7 நாட்களில் இறுதி முடிவு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் அரசு, நிறுவனங்களின் நஷ்டத்தையும், மக்களுக்கு ஏற்படும் பணவீக்க தாக்கத்தையும் சமநிலைப்படுத்தும் தீர்வை தேடி வருகிறது. எரிபொருள் விலை உயர்வு எப்போது, ​​எவ்வளவு என்ற முடிவு விரைவில் வெளியாகும் என்பதால், பொதுமக்கள் கவனமாக எதிர்பார்த்து வருகின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெட்ரோல்
பெட்ரோல் டீசல் விலை
கச்சா எண்ணெய்
வாயு உருளை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நம்ம தங்கம் நம்ம வீட்டில்! இந்தியாவின் பெரிய மூவ்.. வியப்பில் உலக நாடுகள்
Recommended image2
மே மாதத்தில் 13 நாட்கள் வங்கி மூடப்படும்.. பேங்க் லீவு விடுமுறை லிஸ்ட்.!
Recommended image3
New Labour Code 2026 : மாத சம்பளம் வாங்குபவர்கள் தலையில் விழுந்த பேரிடி.! இந்த மாதம் முதல் 'கைக்கு வரும் சம்பளம்' குறையும்.! இதுதான் காரணம்.!
Related Stories
Recommended image1
Cylinder Price Hike: காலையிலேயே பேரதிர்ச்சி! ஒரே நாளில் ரூ.1000 எகிறிய சிலிண்டர் விலை! வீட்டு உபயோக சிலிண்டர் நிலவரம்?
Recommended image2
கல்லூரி மாணவிகளுக்கு ஏற்ற டாப் 5 ஸ்கூட்டர்கள்.. விலை, வெயிட் கம்மி.. மைலேஜ் அதிகம்.. முழு லிஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved