MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • கல்லூரி மாணவிகளுக்கு ஏற்ற டாப் 5 ஸ்கூட்டர்கள்.. விலை, வெயிட் கம்மி.. மைலேஜ் அதிகம்.. முழு லிஸ்ட்!

கல்லூரி மாணவிகளுக்கு ஏற்ற டாப் 5 ஸ்கூட்டர்கள்.. விலை, வெயிட் கம்மி.. மைலேஜ் அதிகம்.. முழு லிஸ்ட்!

Top 5 Scooters for College Girls: கல்லூரி மாணவிகளுக்கு ஏற்ற டாப் 5 ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலையும், எடையும் குறைவாகும் அதே வேளையில் மைலேஜ் அதிகமாகவும் கொடுக்கும் மாடல்கள் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : Apr 30 2026, 04:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கல்லூரி மாணவிகளுக்கு ஏற்ற டாப் 5 ஸ்கூட்டர்கள்
Image Credit : AI

கல்லூரி மாணவிகளுக்கு ஏற்ற டாப் 5 ஸ்கூட்டர்கள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் பெரும்பாலான கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை போன்ற நகர்ப்புறங்களில் ஸ்கூட்டர்களில் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் அதிகரித்து விட்டனர். கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு ஏற்ற, விலை, எடை குறைவாகவும், மைலேஜ் அதிகமாகவும் இருக்கும் டாப் 5 ஸ்கூட்டர்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

26
டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் (TVS Scooty Pep+)
Image Credit : x

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் (TVS Scooty Pep+)

இந்தியாவில் பல ஆண்டுகளாக பெண்களின், கல்லூரி மாணவிகளின் முதல் தேர்வாக இருப்பது டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் ஆகும். இதற்கு காரணம் இதன் எடை 93 கிலோ மட்டுமே இருப்பதால் மாணவிகள் இதனை எளிதாக கையாளலாம். உயரம் குறைவான பெண்களும் இதை சுலபமாக ஓட்ட முடியும். இந்த ஸ்கூட்டர் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 50 கிமீ மைலேஜ் கொடுக்கிறது. இந்த மாடலின் எக்ஸ் ஷோரும் விலை ரூ.65,000-ல் இருந்து தொடங்குகிறது.

Related Articles

Related image1
டாடா டூ எம்.ஜி.. விலை கம்மி.. அதிக ரேஞ்ச்.. நடுத்தர மக்களுக்கான டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்!
Related image2
மைலேஜும் அதிகம்.. மாஸும் அதிகம்.. இந்தியாவை கலக்கும் டாப் 5 டீசல் SUV-க்கள்.. முழு லிஸ்ட் இதோ!
36
யமஹா ஃபாசினோ 125 Fi ஹைபிரிட் (Yamaha Fascino 125 Fi Hybrid)
Image Credit : Social Media

யமஹா ஃபாசினோ 125 Fi ஹைபிரிட் (Yamaha Fascino 125 Fi Hybrid)

125சிசி பிரிவில் ஸ்டைலான அதே வேளையில் எடை குறைந்த ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்றாகும். இதன் எடை 99 கிலோ மட்டுமே. எடை குறைவாக இருந்தாலும் பார்ப்பதற்கு பெரிய வண்டி போல கெத்தாக இருக்கும். கல்லூரி மாணவிகள் ஓட்டுவதற்கு மாஸாக இருக்கும். இந்த மாடல் சுமார் 55 கிமீ முதல் 60 கிமீ வரை மைலேஜ் கொடுக்கிறது. இதன் விலை ரூ.95,000 ஆகும்.

46
ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் (Hero Pleasure+ XTEC)
Image Credit : x

ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் (Hero Pleasure+ XTEC)

பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட பிரத்யேக ஸ்கூட்டர் ஹீரோ பிளஷர்+ எக்ஸ்டெக் மாடல் ஆகும். இதன் எடை 106 கிலோ. கல்லூரி மாணவிகள் கையாள்வதற்கு ஏற்றதாகும். இந்த ஸ்கூட்டர் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 50 கிமீ வரை மைலேஜ் கொடுக்கிறது. இதன் விலை ரூ.84,000. இந்த மாடலில் புளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் ப்ரொஜெக்டர் ஹெட்லைட் என பல்வேறு நவீன வசதிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

56
டிவிஎஸ் ஜெஸ்ட் 110 (TVS Zest 110)
Image Credit : Google

டிவிஎஸ் ஜெஸ்ட் 110 (TVS Zest 110)

எடை குறைவாக இருக்க வேண்டும். அதே வேளையில் நல்ல பிக்கப் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்களுக்கு டிவிஎஸ் ஜெஸ்ட் 110 சிறந்த தேர்வாக இருக்கும். இந்த மாடலின் எடை 103 கிலோ. சுமார் 48 கிமீ முதல் 50 கிமீ வரை மைலேஜ் கொடுக்கிறது. இந்த ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் அதிக இடவசதி இருப்பதால் பேக் உள்ளிட்ட பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரும் விலை ரூ.74,000-ல் இருந்து தொடங்குகிறது.

66
ஹோண்டா ஆக்டிவா 6G (Honda Activa 6G)
Image Credit : bikedekho

ஹோண்டா ஆக்டிவா 6G (Honda Activa 6G)

நாம் மேலே பார்த்த மற்ற ஸ்கூட்டர்களை விட இதன் எடை கொஞ்சம் அதிகம் தான். 106 கிலோ எடை கொண்டது. ஆனாலும் இந்த ஸ்கூட்டரை ஓட்டுவது, திருப்புவது மிகவும் சுலபமாக இருக்கும். இது 1 லிட்டர் பெட்ரோலுக்கு 47 கிமீ முதல் 50 கிமீ வரை மைலேஜ் கொடுக்கிறது. இந்த மாடலின் விலை ரூ.92,000 ஆகும். 

முக்கிய அறிவிப்பு: கல்லூரி மாணவிகள் லீவு முடிவதற்குள் புதிய ஸ்கூட்டர் வாங்க சென்றால் சில ஷோரூம்களில் 'Student Discount' அல்லது இலவச அக்சஸரீஸ்கள் கொடுக்க வாய்ப்புள்ளது. வண்டி வாங்குவதற்கு முன்பு இவற்றை முன்கூட்டியே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆட்டோ
ஆட்டோ செய்திகள்
வாகனம்
கல்லூரி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Car AC | கார் ஏசி கூலிங் பத்தலையா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க ! சில்லுன்னு இருக்கும் !
Recommended image2
Hyundai Loniq 5 Facelift: ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும்.. சென்னை-கோவை வரை போகலாம்! மாஸ் காட்டும் புதிய எலெக்ட்ரிக் கார்
Recommended image3
டாப் மாடல் எதுக்கு? இந்த 5 கார்களின் பேஸ் மாடலிலேயே சகல வசதியும் இருக்கு..!
Related Stories
Recommended image1
டாடா டூ எம்.ஜி.. விலை கம்மி.. அதிக ரேஞ்ச்.. நடுத்தர மக்களுக்கான டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்!
Recommended image2
மைலேஜும் அதிகம்.. மாஸும் அதிகம்.. இந்தியாவை கலக்கும் டாப் 5 டீசல் SUV-க்கள்.. முழு லிஸ்ட் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved